ரூ.1.5 லட்சம் முதலீடுக்கு பயங்கரமான லாபமா இருக்கே! ஜாக்பாட் திட்டம் இதோ!

0

ரூ.1.5 லட்சம் முதலீடுக்கு பயங்கரமான லாபமா இருக்கே! ஜாக்பாட் திட்டம் இதோ!

சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் மற்றும் பல நிறுவனங்கள் சேமிப்பு திட்டத்தை வழங்கிவருகிறது. போஸ்ட் ஆபீஸில் அமலில் உள்ள இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு இந்த திட்டம் பயன்படும். இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கு 7% வட்டி வழங்கப்படுகிறது.

மாறப்போகுது ரூல்ஸ் எல்லாம்….உடனே தெரிஞ்சுக்கோங்க!

இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 1.5 லட்சம் அல்லது மாதத்திற்கு சுமார் ரூ.12,500 முதலீடு செய்யலாம். அவ்வாறு முதலீடு செய்யும் பட்சத்தில் சில லட்சங்களை வரை வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் மாதத்திற்கு ரூ 12,500 முதலீடு செய்பவர்களுக்கு  7.1% வட்டி விகிதத்தில் சுமார் ரூ 40 லட்சம் வழங்கப்படுகிறது.  15 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சமாக இருக்கும், அதே நேரத்தில் முதலீட்டுக்கான வட்டி ரூ.18.18 லட்சமாக இருக்கும்.  18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த திட்டத்தில் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். இந்த திட்டத்திற்கு, வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் முதலீட்டாளர்கள் வரிச் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!