பர்சனல் லோன் வாங்குவதற்கு முன்பு கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை – முழு விவரங்களுடன்!
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு , சேமித்த பணத்தை எடுக்கவும் உதவி வருகிறது. அதேபோல் வங்கிகளில் பல்வேறு கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. தனிநபர் கடன், விவசாய கடன், கல்விக் கடன், தொழில் கடன் என பல வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பலர் பயனடைந்து வருகின்றனர். தனி நபர் கடன் ஆனது நீங்கள் வாங்கும் சம்பளத்தின் 20 மடங்கு தொகையை கடனாக பெற முடியும்.
பான் கார்டு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி – வருமான வரித்துறை விளக்கம்!
இக்கடனை பெறுவதற்கு சம்பளச் சீட்டுகள், வருமான வரிக் கணக்கு (ITR), முகவரிச் சான்றுகள் மற்றும் PAN போன்ற பல முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வங்கிகள் தனிநபர் கடனுக்கு அதிக வட்டி விகிதத்தை வசூலிக்கின்றன. இது 12-18 சதவீதத்திற்குள் அடங்கும். சரியான வட்டி விகிதம் என என்பதை CIBIL ஸ்கோர் தீர்மானிக்கும். CIBIL ஸ்கோர் குறைவாக இருக்கும்போது அதிக வட்டியிலும், CIBIL ஸ்கோர் அதிகமாக இருக்கும் போது குறைவான வட்டியிலும் கடன் பெற முடியும்.
























