தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
??????????? ????? 20 ????????????? ????? ????? ????????.. ?????? ????? ????? ?????!!
தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (அக்டோபர் 4) முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று (அக்டோபர் 4) புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை,திருப்பத்தூர், திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது .

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்..!! இந்த 4 நாட்களை மட்டும் மிஸ் பண்ணிராதீங்க..!! மத்திய அரசு தகவல்..!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வானம் அடுத்து ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் குமரிக்கடல், தெற்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணி 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று (அக்டோபர் 4) கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!