வான் சாகசங்கள்..!! விமானங்கள் இயக்க கால தாமதம்..!! சென்னை விமான நிலையம் தகவல் .!!
விமான தினத்தை முன்னிட்டு 2024ம் ஆண்டு விமானப்படை அணிவகுப்பின் ஒரு பகுதியாக வான் சாகச நிகழ்ச்சிகள் சென்னை மெரினாவில் நடைபெற உள்ளது. இதனால், சென்னை விமான நிலையத்தில் விமான இயக்கங்களில் கால தாமதாகும் என்றும், விமான நிலைய வான் தடம் 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும் என்று சென்னை விமான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கும் மதுரை விமான நிலையம்..!! முழு விவரம் உள்ளே..!!
மேலும், இன்று பிற்பகல் 1.45 முதல் 3.15 வரை வான்தடம் மூடப்படும் என்றும், அக்டோபர் 2,3,5,6,7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடுதல் இடைவெளிகள் இருக்கும் எனவும், இதனால் பயணிகள் பயண அட்டவணைகளை சரி பார்த்து பயணங்களை மேற்கொள்ள விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.



























