அட, நெல்லையில் மீண்டும் ஒரு சோலார் பேனல் தொழிற்சாலை…! “வேலைவாய்ப்பு மட்டுமே இவ்வளவா”..!!
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் “டாடா” நிறுவனத்தின் சோலார் பேனல் தொழிற்சாலை இயங்கி வரும் நிலையில், மேலும், மற்றொரு சோலார் பேனல் தொழிற்சாலை அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்த “விக்ரம் சோலார்” நிறுவனமானது, ரூ. 1260 கோடி முதலீட்டில் 146 ஏக்கர் பரப்பளவில் 3 ஜிகா வாட்ஸ் சக்தி கொண்ட சோலார் பேனல்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இதன் மூலம், 3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதையும் உறுதி செய்துள்ளது.
கூடிய விரைவில் வீடுகளில் மின் மீட்டரை மாற்ற நடவடிக்கை..!! மின்வாரிய அதிகாரிகள் தகவல்..!!

























