தமிழகத்தில் புதிய விமான பயிற்சி நிலையம்….!! ” முதற்கட்ட பணியை தொடங்கியது TIDCO நிறுவனம்”..!!
இந்திய அரசானது, நாடு முழுவதும் விமான சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக “உதான்” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது, இத்திட்டத்தின் மூலம், மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, நாட்டிலுள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் புதிய விமான நிலையங்களை கட்டப்பட உள்ளன. எனவே, தகுதி பெற்ற விமான ஓட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது.
இன்று (27.09.24) பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. தமிழகத்திற்கு நிதி கிடைக்குமா??
இந்தியாவில் விமான ஓட்டிகளுக்கான பயிற்சி நிலையங்கள் குறைவு என்பதால், டிட்கோ நிறுவனமானது, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் புதிய விமான பயிற்சி நிலையம் அமைக்க முடிவெடுத்த நிலையில், கடந்த ஜூலை மாதம் பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கியது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு தொழில் துறை நிறுவனம்(TIDCO) ஆனது கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணியை இன்று தொடங்கியுள்ளதாகவும் மற்றும் அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

























