“அதிமுக அரசின் லட்சணத்துக்கு உதாரணம்”…!! ” அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்”..!!
நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் முதலீட்டாளர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொள்ளும் போதே, முதலீடுகள் வருவதாக தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், முதலீட்டாளர்களிடம் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அந்நிறுவனமானது தமிழகத்திற்கு உறுதியாக முதலீடு செய்யும் என்று கணித்த பின்னரே முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இதனால் தான், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் MoU நிறைவேறும் விகிதம் அதிகமாக உள்ளது என்று தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று (செப்.24) 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் அலர்ட்!!
மேலும், “ஆயிரக்கணக்கில் ஒப்பந்தங்களில் அனைவராலும் கையெழுத்து போட முடியும், ஆனால், முதலீடாக மாறும் ஒப்பந்தங்கள் மட்டுமே பலன் தரும், இது ஏன் பழனிசாமிக்கு புரியவில்லை? மற்றும் KIA நிறுவனம் ஆந்திராவுக்கு போனது, அதிமுக அரசின் லட்சணத்துக்கு உதாரணம்” என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சித்துள்ளார்.



























