ATM கார்டு இல்லாமல் ஏ.டி.ம் மிஷினில் பணம் எடுக்கலாமா.? என்னங்க சொல்றீங்க..!
இந்தியாவில் தற்போதைய காலகட்டத்தில் ATM மற்றும் UPI பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் ATM களில் பணம் எடுக்க வேண்டும் என்றால் ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்க முடியாது. ஆனால் இனிவரும் காலகட்டத்தில் ATM கார்டு இல்லாமல் UPI வைத்து மக்கள் சுலபமாக ATM ல் பணம் எடுத்துக்கொள்ளும் புதிய செயல்முறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ATM ல் UPI மூலம் பணம் எடுப்பது எப்படி?
1. உங்கள் அருகிலுள்ள ATM மையத்திற்கு சென்று “UPI cash withdrawal at the ATM” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
உயரப்போகும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வரி …?? ஷாக்கில் மக்கள்..!!
2. பிறகு நீங்கள் எடுக்க இருக்கும் பணத்தொகையை என்டர் செய்யவும். குறிப்பாக இந்த முறையில் 10,000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்.
3.அதன் பின் ATM மிஷினில் காண்பிக்கப்படும் QR கோடு , உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் QR அப்ளிகேஷன் மூலம் ஸ்கேன் செய்து நீங்கள் பயன்படுத்தும் ATM கார்டின் பின் நம்பரை என்டர் செய்யவும். கடைசியாக உங்களுக்கு தேவையான பணம் ATM மிஷினில் இருந்து கிடைத்துவிடும்.
இத்தகைய செயல்முறையின் மூலம் ATM கார்டு இல்லாமல் சுலபமாக ATM ல் இருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம்.


























