41 பேரின் உயிரை பறித்த பேருந்து..! உடல்களை மீட்பதில் சிக்கல்..!
நமது இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது நேபாளத்திற்கு பயணிகளுடன் சென்ற இந்திய பேருந்து விபத்திற்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்தியாவை சேர்ந்த 43 பயணிகளுடன் சென்ற இந்திய பேருந்து ஒன்று நேபாளத்தில் உள்ள மர்ஸ்யாங்கடி ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்தியாவில் தீவிரமாய் பரவும் எலிக்காய்ச்சல்.. பொதுமக்களே உஷார்!!
இந்த விபத்தில் 41 பயணிகள் உயிரிழந்து உள்ளதாக அமைச்சர் கிரிஷ் மகாஜன் மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், அதில் 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், அந்த உடல்களை அவர்களின் குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், மற்றவர்களின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
























