தமிழகத்தில் 20 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0

தமிழகத்தில் 20 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 20 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்:

தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. சமீபத்தில் மழையின் காரணமாக வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 330 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் மக்கள் மழையை கண்டு அச்சப்படுகின்றனர்.

வயநாடு பேரழிவு சாதாரணமானது அல்ல – பிரதமர் மோடி பேச்சு!

இந்நிலையில் தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!