மாதம் ரூ.79,000/- சம்பளத்தில் ICFRE நிறுவன வேலைவாய்ப்பு – ஜனவரி 30 விண்ணப்பிக்க இறுதி நாள்!
இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுமம் (ICFRE) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Deputy Director General (Education) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.79,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ICFRE |
பணியின் பெயர் | Deputy Director General |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.01.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ICFRE காலிப்பணியிடங்கள்:
ICFRE நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy Director General (Education) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Deputy Director General கல்வித்தகுதி:
Deputy Director General பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, Doctorate Degree (Ph.D) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Deputy Director General அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்திய வனத்துறையில் குறைந்தது 26 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Deputy Director General வயது வரம்பு:
இந்த ICFRE நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.01.2024 அன்றைய தினத்தின் படி, 57 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Deputy Director General சம்பளம்:
Deputy Director General பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Level – 15 என்ற ஊதிய அளவின் படி, ரூ.67,000/- முதல் ரூ.79,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
SBI CBO வேலைவாய்ப்பு 2023 – 5280 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
ICFRE தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICFRE விண்ணப்பிக்கும் முறை:
இந்த ICFRE நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை 30.01.2024 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.