SAI நிறுவனத்தில் Young Professionals காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.70,000/- || உடனே விரையுங்கள்!
Sports Authority of India (SAI)-வில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Young Professionals பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | SAI |
பணியின் பெயர் | Young Professionals |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SAI காலிப்பணியிடங்கள்:
Young Professionals பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Young Professionals கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree in Arts / Science / BE / B.Tech / PG Diploma / MBBS / LLB / CA / ICWA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
SAI வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Young Professionals ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு காத்திருக்கும் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
SAI தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26.12.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.