ரூ.45 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை….இன்று தாறுமாறாக ஏறியது – ஷாக்கில் உறைந்த நகைப்பிரியர்கள்!
தமிழகத்தில் தங்கத்தின் விலை இன்று என்றும் இல்லாத அளவுக்கு தாறுமாறாக ஏறியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.
தங்கம் விலை
தமிழகத்தில் தங்கத்தின் விலை எப்போதும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் நகைப்பிரியர்கள் தங்கத்தை வாங்க மிகுந்த ஆர்வம் கொள்கின்றனர். மேலும் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலையானது ரூ.520 என அதிரடியாக உயர்ந்துள்ளது.
திருவள்ளூரில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு – ஏப்ரல் 11 முதல் தொடக்கம்!
அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,800 என விற்பனையாகிறது. இதே போன்று கிராமுக்கு ரூ.65க்கு உயர்ந்து, ரூ.5,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக கிலோவுக்கு ரூ.700 என உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.77,800க்கும், கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து, கிராமுக்கு 77.80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Exams Daily Mobile App Download