TNPSC Group 4 Exam Syllabus in Tamil – Free PDF Download                  

1
 TNPSC Group 4 Exam Syllabus in Tamil - Free PDF Download                  
 TNPSC Group 4 Exam Syllabus in Tamil - Free PDF Download                  

 TNPSC Group 4 Exam Syllabus in Tamil – Free PDF Download                  

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது (TNPSC), அரசு துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதிலும், குறிப்பாக பத்தாம் வகுப்பு தரத்தில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வை, தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர். மேலும், இந்த தேர்விற்கு தமிழ் மொழி தகுதி தேர்வு, பொது அறிவு, திறனறிவு மற்றும் மனத் திறன் ஆகிய மூன்று பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்விற்கு இன்னும் குறைந்த காலமே உள்ளது. எனவே, தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு, தேர்விற்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

   பகுதி அ – பொது அறிவு 

                              

அலகு 1 – பொது அறிவியல்:

பேரண்டத்தின் இயல்பு – இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் – இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்; தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்; உயிரியலில் முக்கிய கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் சுகாதாரம், மனித நோய்கள்; சுற்றுப்புறச் சூழல் அறிவியல்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்; நடப்பு நிகழ்வுகள்.

அலகு 2 – புவியியல்:

புவி அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப்பொழிவு, வானியல் மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள்; போக்குவரத்து – தகவல் தொடர்பு; தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்; பேரிடர் – பேரிடர் மேலாண்மை; சுற்றுச்சூழல் – பருவநிலை மாற்றம்; புவியியல் அடையாளங்கள்; நடப்பு நிகழ்வுகள்.

அலகு 3 – இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம்:

சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் – தென் இந்திய வரலாறு; தேசிய மறுமலர்ச்சி – ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள் – இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்கள் உருவாதல் – பி.ஆர். அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ. சிதம்பரனார், தந்தை பெரியார், ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், காமராஜர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், முத்துலட்சுமி அம்மையார், மூவலூர் இராமாமிர்தம் மற்றும் பல தேசத் தலைவர்கள்; தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வறு முறைகள் மற்றும் இயக்கங்கள்; இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு; இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு.

அலகு 4 – இந்திய ஆட்சியியல்:

இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்; குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள், அரசின் நெறிமுறை கோட்பாடுகள்; ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்; கூட்டாட்சியின் அடிப்படை தன்மைகள்; மத்திய – மாநில உறவுகள்; தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி; பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் அறியும் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனிதஅ உரிமைகள் சாசனம்; தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் ஆட்சியல் முறைகளும்; நடப்பு நிகழ்வுகள்.

அலகு 5 – இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்:

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்; வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதி ஆணையம் – மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு – சரக்கு மற்றும் சேவை வரி; பொருளாதார போக்குகள் – வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் திட்டங்கள் – சமூகப் பிரச்சனைகள் – மக்கள்தொகை, கல்வி, நலவாழ்வு, வேலைவாய்ப்பு, வறுமை; சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும், சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்; தமிழ்நாட்டின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்; தமிழ்நாட்டின் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்; நலன்சார் அரசுத் திட்டங்கள்; தற்போதைய சமூக பொருளாதார பிரச்சனைகள்; நடப்பு நிகழ்வுகள்.

அலகு 6 – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்:

தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்; திருக்குறள் – மதசார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் – அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை – மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் – திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு – திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்; விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலை போராட்டத்தில் பெண்களின் பங்கு; தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்.

    பகுதி ஆ – திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்

              

அலகு 1 – திறனறிவு:

சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெரு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM); விகிதம் மற்றும் விகிதாச்சாரம்; தனிவட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை.

அலகு 2 – காரணவியல்:

தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை.

      பகுதி இ – தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு 

         

அலகு 1 – இலக்கணம்:

(a). எழுத்து: பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல் – சந்திப்பிழை – குறில், நெடில் வேறுபாடு – லகர, ளகர, ழகர வேறுபாடு – னகர, ணகர வேறுபாடு – ரகர, றகர வேறுபாடு – இனவெழுத்துகள் அறிதல் – சுட்டு எழுத்துகள் – வினா எழுத்துகள் – ஒருமை பன்மை அறிதல்.

(b). சொல்: வேர்ச்சொல் அறிதல் – வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம்,  வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் – அயற்சொல் – தமிழ்ச்சொல், எதிர்சொல் – வினைச்சொல் – எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை அறிதல் – இரண்டு வினை சொற்களின் வேறுபாடு அறிதல்.

அலகு 2 – சொல்லகராதி:

(a). எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல், ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளை கண்டறிதல் – ஒருபொருள் தரும் பல சொற்கள், பொருந்த சொல்லை கண்டறிதல், அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்தல்; ஒருபொருள் பன்மொழி – இருபொருள் குறிக்கும் சொற்கள் – பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு – சொல்லும் பொருளும் அறிதல் – ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்.

(b). கோடிட்ட இடத்தில் சரியான சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுதல் – பொருத்தமான சொல்லை தெரிவு செய்தல் – ஊர் பெயர்களின் மரூஉவை எழுதுதல் – பிழை திருத்துக – பேச்சு வழக்கு சொற்களுக்கு இணையான தூய தமிழ் சொற்களை இணைத்தல்.

(c). பேச்சு வழக்கு தொடர்களிலுள்ள பிழை திருத்தும் – சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குதல் – அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்த்தல் – பொருள் தரும் ஓர் எழுத்து – பல பொருள் தரும் ஒரு சொல்லை கூறுக.

அலகு 3 – எழுதும் திறன்:

(a). சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் அமைத்தல் – தொடர் வகைகள் – செய்வினை, செய்யப்பட்டு வினை – தன்வினை, பிறவினை – ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.

(b). மரபுத் தமிழ்: திணை மரபு – உயர்திணை, அஃறிணை; பால் மரபு – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்; இளமைப் பெயர், வினை மரபு, குறியீடுகள் – கால்புள்ளி, அரை புள்ளி, முக்கால் புள்ளி, முற்று புள்ளி, வியப்பு குறி, வினா குறி அமையும் இடங்கள்.

அலகு 4 – கலைச் சொற்கள்:

பல்துறை சார்ந்த கலைச் சொற்களை அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, பல்துறை சார்ந்த தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும்.

அலகு 5 – வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்:

கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடுத்தல் – செய்தித்தாள் – தலையங்கம் – முகப்புச் செய்திகள் – அரசு சார்ந்த செய்திகள் – கட்டுரைகள் – இவற்றை வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் – உவமை தொடரின் பொருளறிதல் – மரபு தொடரின் பொருளறிதல் – பழமொழிகள் பொருளறிதல் – ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்.

அலகு 6 – எளிய மொழி பெயர்ப்பு:

ஆங்கிலம் மற்றும் பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் அறிதல் – பயன்பாட்டில் உள்ள ஆங்கில சொற்களை மொழிபெயர்த்தல் – ஆவணங்களின் தலைப்பு – கோப்புகள் – கடிதங்கள் – மனுக்கள் – மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்.

அலகு 7 – இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்:

திருக்குறள் தொடர்பான செய்திகள் – ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைக்கோடல், வினை செயல்வகை, அவையஞ்சாமை, கண்ணோட்டம், அன்புடைமை, கல்வி, நடுநிலைமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல், புறங்கூறாமை, அருளுடைமை – மேற்கோள்கள் – அறநூல் தொடர்பான செய்திகள் (நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானுறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னாநாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஒளவையார் பாடல்கள்) – தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் – உ.வே சாமிநாத ஐயர், தெ.பொ. மீனாட்சி சுந்தரம், சி. இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் – தேவநேய பாவாணர், அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு போப், வீரமாமுனிவர் தமிழ் தொண்டு தொடர்பான செய்திகள் – தமிழ் சான்றோர் பற்றிய செய்திகள்; பாவேந்தர், டி.கே. சிதம்பரனாதர், தவத்திரு குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாரா பாரதி, வேலுநாட்சியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா. ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர். 

TNPSC Group 4 Syllabus Download

Join the ExamsDaily Whatsapp Group

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!