TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு அறிவிப்பு!
அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளையும் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TET தேர்வுக்கான மாதிரி தேர்வு நாளை நடைபெற உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா வருகையால் கடந்த 2 ஆண்டுகளாக எந்த ஒரு போட்டி தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து அனைத்து விதமான போட்டித்தேர்வு அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் TET தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. இந்த அறிவிப்பின்படி தேர்வுக்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். மேலும் தமிழக ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளுக்கான கணினி வழி தேர்வு, வரும், 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால், செப் 10 முதல் 15 ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான நபர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். எனவே தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு, எங்களது Exams Daily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளையும், மாதிரி தேர்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TET தேர்வின் பொது தமிழ் & பொது ஆங்கிலம் 12 பாடப்பகுதிக்கான மாதிரி தேர்வு நாளை( ஆகஸ்ட் 11) காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கலந்து கொள்ளலாம்.
TET – General Tamil & General English 12
Mock Test “WhatsApp Group” Join Now