Post Officeல் மாதம் ரூ.10,000 முதலீட்டில் ரூ.16 லட்சம் வரை ரிட்டன்ஸ் – முழு விவரங்கள் இதோ!

0
Post Officeல் மாதம் ரூ.10,000 முதலீட்டில் ரூ.16 லட்சம் வரை ரிட்டன்ஸ் - முழு விவரங்கள் இதோ!
Post Officeல் மாதம் ரூ.10,000 முதலீட்டில் ரூ.16 லட்சம் வரை ரிட்டன்ஸ் - முழு விவரங்கள் இதோ!
Post Officeல் மாதம் ரூ.10,000 முதலீட்டில் ரூ.16 லட்சம் வரை ரிட்டன்ஸ் – முழு விவரங்கள் இதோ!

அஞ்சலக துறையானது மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு அரசு அமைப்பாகும். இதனால் பொதுமக்கள் அதிக நம்பிக்கையுடன் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பலவிதமான பயன்களையும் அடைந்து வருகின்றனர். இந்த வகையில் அஞ்சல் துறையின் தொடர் வைப்பு கணக்கு குறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

தொடர் வைப்புக் கணக்கு:

மக்கள் பணத்தைச் சேமிக்கவும் அதிக வட்டி விகிதங்களைப் பெறவும் தபால் நிலையங்கள் பல திட்டங்களை வழங்குகின்றன. மேலும் முதலீட்டிற்கு உத்தரவாதமும், அதே சமயம் ரிஸ்க் இல்லாத திட்டமாகவும் அஞ்சல் நிலைய சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன. மற்ற ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை ஒப்பிடுகையில் இவை நல்ல பலனை கொடுக்கின்றன. இது மட்டுமல்லாமல் வரிச் சலுகையும் கூடுதலாக கிடைக்கிறது. பொதுவாக அஞ்சல் நிலைய சேமிப்புத் திட்டங்களில் 5.5 சதவீதம் முதல் 7.6 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அஞ்சல் துறையின் தொடர் வைப்புக் கணக்குக்கு ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகவும், சிறுசேமிப்பு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தின் கணக்கை பெரியவர்கள் தனியாக தொடங்கிக் கொள்ளலாம். அப்படி இல்லையெனில் ஜாய்ண்ட் அக்கவுண்டாகவும் தொடங்கிக் கொள்ளலாம். இதே 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இந்த கணக்கை பாதுகாவலர் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 5.8 சதவீத வட்டி விகிதம் கிடைக்கிறது. இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் ஒரு வருடத்திற்கு பிறகு நிலுவையில் 50% அனுமதிக்கப்படுகிறது. அதன் பிறகும் தொடர விரும்பினால் விண்ணப்பத்தினை கொடுத்து தொடரலாம். இதையடுத்து 12 தவணை தொகை செலுத்திய பிறகு அதற்கு எதிராக, நீங்கள் இந்த தொடர் வைப்பு கணக்கின் மூலம் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

அதீத கனமழை காரணமாக ‘ரெட்’ அலர்ட் – வானிலை மையம் முக்கிய தகவல்!

மேலும் தற்போதைய 5.8 சதவீத வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000 முதலீடு செய்தால், 10 ஆண்டுகளில் அந்தத் தொகை சேர்ந்து உங்களுக்கு ரூ.16 லட்சத்தை வருமானமாகத் தரும். இதையடுத்து 10 வருடத்திற்கான உங்கள் மொத்த வைப்புத்தொகை 12 லட்சமாக இருக்கும், மேலும் மதிப்பிடப்பட்ட வருமானம் சுமார் ரூ.4.26 லட்சமாக இருக்கும். எனவே உங்களது மொத்த வருமானம் ரூ.16.26 லட்சமாக இருக்கும். தொடர்ந்து கூட்டு வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிடப்படுகிறது, இது முதலீட்டாளர்களுக்கு அடிக்கடி வருவாயை ஈட்ட உதவும் என்பதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!