TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும், நிச்சயமாக வெற்றி பெறலாம்.
ஆன்லைன் மாதிரி தேர்வு:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக அரசு மற்றும் அரசு சாரா வேலைவாய்ப்பு அறிவிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில், அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSC நடத்தும் குரூப் VII-B (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) செயல் அலுவலர் நிலை-III பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தேர்வுக்கு 10,+2 அல்லது இணைக் கல்வித்தகுதி மற்றும் இளங்கலையில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனத்திடம் இருந்து பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் மதம் மற்றும் சமய நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதே போல தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Group 8 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்து சமய அறநிலையத்துறையில் TNPSC Group 8 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் குரூப் VII-B & VIII தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் இந்து மதம், சைவம் மற்றும் வைணவம் 16 பகுதிக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (26.07. 2022) நடைபெற உள்ளது. எனவே தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
MOCKTEST LINK
Mock Test “WhatsApp Group” Join Now