பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் உண்மையான மனைவி யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!
பாக்கியலட்சுமி தொடரில் ஒரே நேரத்தில் மனைவியையும் காதலியையும் கட்டி இழுத்துக் கொண்டிருக்கும் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஸ் உண்மையான மனைவியுடன் இருக்கும்படியான புகைப்படம் சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. டிஆர்பியிலும் பாக்கியலட்சுமி தொடர் முன்னிலையில் இருந்து வருகிறது. பாக்கியலட்சுமி தொடர் இந்த அளவுக்கு ரீச்சாகி கொண்டிருப்பதற்கும் முழுக்க முழுக்க கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தான் காரணம். இவர் தனது நடிப்பால் எக்கச்சக்கமான ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இவரது முக பாவனைகள் அனைத்தும் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
கோபியின் கதாபாத்திரத்தில் வேறொரு நடிகர் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு சீரியல் ரீச்சாகி இருக்குமா என்பது சந்தேகமே. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறந்த சீரியல் என்கிற விருதை பாக்கியலட்சுமி தான் பெற்றது. மேலும், சிறந்த வில்லன் என்கிற விருதை கோபி பெற்றார். அந்தளவுக்கு பாக்கியலட்சுமி தொடர் மக்களிடையே நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பாக்கியலட்சுமி தொடரில் தன்னை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டிருக்கும் மனைவியை விவாகரத்து செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படும் கதாபாத்திரம் தான் கோபி.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கண்ணம்மா செய்த காரியம்!
பாக்கியாவிடம் மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் எப்படி தப்பிப்பது என்பதற்கு கோபியின் முகபாவனைகள் ரசிக்கத்தக்கதாக இருந்து வருகிறது. ஒரே நேரத்தில் பாக்கியாவையும் ராதிகாவையும் சமாளித்துக் கொண்டு இருக்கிறார். தற்போது பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதிஷ் தனது உண்மையான மனைவியுடன் இருக்கும்படியான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். கோபியின் உண்மையான மனைவியா என ரசிகர்கள் வியப்பில் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது புகைப்படம் வைரலாகி வருகிறது.