Reliance Jio பயனர்களுக்கு ரூ.300க்கு குறைந்த சூப்பரான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம் இதோ!
இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த வகையில் ரூ 300 க்கு குறைவாக உள்ள திட்டங்களான, ரூ.239 ரீசார்ஜ் திட்டம் மற்றும் ரூ.296 ரீசார்ஜ் திட்டம் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
முழு விவரம்:
மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இணைய வசதி உள்ளது. ஏனென்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை, நமக்கு தேவையான தகவல்களை செல்போன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் தொலைதொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஜியோ நிறுவனம் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இருப்பினும் ரிலையன்ஸ் ஜியோ தனது ரீசார்ஜ் திட்டத்தின் விலையை டிசம்பர் 1 முதல் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஜியோ பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.239 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 42 ஜிபி டேட்டாவை தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம், அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 100 SMS ஆகிய பலன்களை வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். அடுத்து ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.296 ரீசார்ஜ் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி திட்டமாகும். இந்த திட்டம் ஜியோவின் ஃப்ரீடம் பிளான் பிரிவில் வருகிறது. இந்த திட்டத்தில் 25 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம்? முதல்வர் முக்கிய தகவல்!
இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் ,தினசரி டேட்டாவில் எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் அல்லது ஒரே நாளில் முழு டேட்டாவையும் பயன்படுத்தலாம். ஜியோவில் தினசரி FUP லிமிட் இல்லாமல் வரும் ஒரே திட்டம். ஒரு நாளைக்கு 100 SMS அனுப்பும் வசதி மற்றும் இலவச அன்லிமிடெட் கால் வசதி உள்ளது. மேலும், இந்த திட்டம் ஜியோ செயலிக்கு (ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட்) இலவச சந்தா உடன் வருகிறது. இந்த வகையில் 300 குறைவாக ரீசார்ஜ் செய்து ஜியோவின் இந்த சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.