தமிழக அரசு வேலைக்காக காத்திருக்கும் 75.88 லட்சம் பேர் – ஷாக் ரிப்போர்ட்!

0
தமிழக அரசு வேலைக்காக காத்திருக்கும் 75.88 லட்சம் பேர் - ஷாக் ரிப்போர்ட்!
தமிழக அரசு வேலைக்காக காத்திருக்கும் 75.88 லட்சம் பேர் - ஷாக் ரிப்போர்ட்!
தமிழக அரசு வேலைக்காக காத்திருக்கும் 75.88 லட்சம் பேர் – ஷாக் ரிப்போர்ட்!

தமிழகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை வேண்டி பதிவு செய்து வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 75.88 லட்சமாக உயா்ந்ததுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு பதிவு:

தமிழகத்தில் அரசு பணிக்கு செல்ல விரும்புவோர் அந்தந்த மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் கல்வி தகுதிகளை பதிவு செய்வது கட்டாயம். இதன் மூலம் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் பதிவு செய்த வேலை வாய்ப்பை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பு செய்வது அவசியமாகும். மேலும் தங்கள் கல்வித் தகுதிகளையும் அவ்வப்போது பதிவு செய்ய வேண்டும். தற்போது நிலவி வரும் பெருந்தொற்று காலத்தில் ஏராளமானோர் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

இவர்களுக்கு உதவும் வகையில் அரசு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதனை தொடர்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காதவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. கல்வித் தகுதிகளை பொறுத்து இத்தொகையானது மாறுபடும். மேலும் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து மாற்றுத்திறனாளர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் பணியிட எண்ணிக்கை மற்றும் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.

GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு – சம்பளம்: 16000/-

தற்போது வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சுமார் 75.88 பேர் பதிவு செய்துள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில் 35,56,85 போ் ஆண்கள், 40,32, 46 போ் பெண்கள், 228 மூன்றாம் பாலினத்தவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உதவி ஆய்வாளா் காலிப் பணியிட தோ்வுக்கான பயிற்சி வகுப்பு இணையவழியில் ஏப்ரல் 4ம் தேதி அன்று நடைபெறும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!