ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

இந்தியாவில் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணங்களில் ஒன்று. ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை சுலபமான முறையில் மாற்றிக் கொள்ளலாம். இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஆதார் அட்டை

இந்தியாவில் தனிநபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். மேலும் பல்வேறு சேவைகளை பெற ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. அதனால் அனைவரும் ஆதார் வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். ஆதார் கார்டு மூலமாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. ஆதார் கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் கார்டில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். மேலும் இதில் 12 இலக்க அடையாள எண்ணும் உள்ளது.

PPF திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 5க்குள் இதை செஞ்சா அதிக லாபம்!

இதில் ஏதேனும் தகவல்களை புதுப்பிக்க விரும்பினால் UIDAIயின் இணையதளத்தில் சென்று புதுப்பிக்கலாம். அதாவது இதில் தங்களின் பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்டவை புதுப்பிக்க முடியும். மேலும் தற்போது ஆதார் கார்டில் உள்ள தங்களின் புகைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருக்கும். மேலும் அப்போது எடுக்கப்பட்ட வெப்கேமில் புகைப்படம் தெளிவாகவும் இருக்காது. இந்த புகைப்படத்தை சுலபமாக மாற்றி விடலாம். இதற்கு பதிலாக தங்களின் சிறந்த புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்யலாம்.
இதனையும் https://uidai.gov.in/ என்ற UIDAIயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று புதுப்பிக்க இயலும்.

தற்போது ஆதார் கார்டில் உள்ள தங்களின் பழைய புகைப்படத்திற்கு பதிலாக மற்றொரு புகைப்படத்தை மாற்றுவதற்கான வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

1. இதற்கு முதலாவதாக https://uidai.gov.in/ என்ற UIDAIயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இதில் ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கம் செய்த பிறகு தங்களின் விவரங்களை படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து ஆதார் பதிவு மையத்திற்கு சென்று படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

3. இப்போது புதிய புகைப்படத்தை எடுத்து அதனை தங்களின் ஆதார் கார்டில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

4. இதனை செய்ய ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.100யை கட்டணமாக செலுத்த வேண்டும்.

5. இதனை தொடர்ந்து தங்களுக்கு ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண் உள்ளிட்டவை கொடுக்கப்படும்.

6. அதன்பின் URN மூலம் தங்களின் ஆதார் அட்டையின் புதுப்பிப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

7. இறுதியாக இந்த புதிய புகைப்படம் 90 நாட்களுக்குள் மாற்றப்பட்டு விடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!