நடப்பு நிகழ்வுகள் – 5 செப்டம்பர் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 5 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் - 5 செப்டம்பர் 2023

நடப்பு நிகழ்வுகள் – 5 செப்டம்பர் 2023

தேசிய செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் இரண்டாவது பதிப்பு புது தில்லியில் தொடங்க உள்ளது.

 • 2023 ஆம் ஆண்டிற்கான கடற்படை தளபதிகளுக்கான மாநாட்டின் இரண்டாவது பதிப்பு ஆனது செப்டம்பர் 04 2023 அன்று தேசிக தலைநகரமான புதுதில்லியில் தொடங்குகிறது. இந்த மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 • இந்திய கடற்படையின் அனைத்து தொகுப்பு பிரிவுகளின் மூத்த தலைமை கடந்த ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய செயல்பாட்டு, தளவாடங்கள், பொருட்கள், பயிற்சி மற்றும் நிர்வாக செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்வதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது நடைபெறுகிறது.

“ஒரே நாடு, ஒரே தேர்தல்” நடைமுறை குறித்து ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட உயர்நிலை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.

 • “ஒரே நாடு, ஒரே தேர்தல்” நடைமுறை குறித்து ஆய்வு செய்ய எட்டு பேர் கொண்ட ஒரு உயர்மட்ட ஆணைய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது மற்றும் இந்த குழுவின் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 • மேலும் இந்த குழுவில் 15வது நிதி ஆணைய முன்னாள் தலைவர் என்.கே.சிங் மற்றும் இந்த குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்து கொள்கிறார் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • இந்தியாவில் கிட்டத்தட்ட 1951-52 முதல் 1967 வரை மக்கள் சபை மற்றும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் AI-ஆற்றல் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பை தொடங்கியுள்ளது.

 • தெலுங்கானாவின் தலைநகரமான ஹைதராபாத்தை சேர்ந்த ரோபோட்டிக்ஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கக் கூடிய அதிநவீன தன்னாட்சி ஆண்டி-ட்ரோன்(ஆளில்லா விமானத்தை தாக்கி அளிக்கக்கூடிய) அமைப்பை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 
 • எண்ணெய் ரிக் வயல்கள், அணுசக்தி கூடங்கள் போன்ற முக்கிய நிறுவல்களை மட்டுமல்ல, ஒரு முழு நகரத்தையும் உள்ளடக்கிய பரந்த பகுதியையும், எந்த வகையான பல ட்ரோன்களிலிருந்தும் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பானது வடிவமைக்கப்பட்டுட்டள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற அமைப்பு உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அமைச்சகங்கள், சிவில் சேவைகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு திறன் மேம்பாட்டு முன்னெடுப்புகளை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 • அரசாங்கத்தின் அதிகாரிகளை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதையும் பொது சேவை வழங்கலின் செயல்திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு உயர்கல்வித் துறை (DoHE), திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்(MSDE) மற்றும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை(DoSEL), ஆகியவை திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் (CBC) இணைந்து, வருடாந்திர திறன் மேம்பாட்டுத் திட்டத்தை(ACBP) வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது.
 • இவை அனைத்தும் கர்மயோகி திட்டத்தின் ஒரு பகுதியாகும் என மத்திய அரசு வெளியீட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அரசு ஊழியர்களின் சிந்தனையை நவீனமயமாக்குவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் மகாத்மா காந்தியின் சிலையை குடியரசுத் தலைவர் முர்மு திறந்து வைத்துள்ளார்.

 • இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய தலைநகரமான புதுடெல்லியில் உள்ள ராஜ்காட் அருகே உள்ள காந்தி சாலையில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 12 அடி உயர சிலையை செப்டம்பர் 04 2023 அன்று திறந்து வைத்துள்ளார்.
 • மேலும் இந்த பகுதியில் காந்தி வாடிகா ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மகாத்மா காந்தியின் பல உருவங்கள் மற்றும் அவரின் வாசகங்கள் மற்றும் விழுமியங்கள் ஆகியவை இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச செய்திகள்

நேபாள பிரதமர் ஹலோ சர்க்கார் என்ற முன்னெடுப்பு சேவையை தொடங்கி வைத்துள்ளார்.

 • நேபாளத்தில் மூன்று வேலைப்பாடுகளில் 24 மணி நேரமும் செயல்படுவதற்கான ‘ஹலோ அரசு’ அல்லது ‘ஹலோ சர்க்கார்’ என்ற முன்னெடுப்பு சேவையை செப்டம்பர் 03 2023 அன்று அந்நாட்டு பிரதமர் புஷ்ப கமல் தஹால் தொடங்கி வைத்துள்ளார்.
 • இது பொதுமக்கள் அவதிப்படும் கூறுகளிலிருந்து அவர்களுக்கு உடனடியான சேவைகளை வழங்குவதையும் NCell நெட்வொர்க் மூலமாக மக்களுக்கு உடனடியான தீர்வுகளை வழங்குவதை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த முன்னெடுப்பானது தொடங்கப்பட்டுள்ளது என நேபாள பிரதமர் அறிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டிற்கான மற்றும் 43ஆவது ஆசியான் உச்சி மாநாடானது ஜகார்த்தாவில் நடத்த திட்டம்.

 • தென்கிழக்கு ஆசிய நாடுகளின் 43வது மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான கூட்டமைப்பின்(ஆசியான்) உச்சி மாநாடு இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தாவில் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாடானது செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை என நடைபெற கூடிய இரண்டு நாள் மாநாடாகும்.
 • சமீப காலங்களாக தென் சீனக் கடலில் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், சில ஆசியான் உறுப்பினர்களால் சர்ச்சைக்குரிய பெரிய பகுதிகள் மீது சீனா புதிய வரைபடத்தை வெளியிட்ட பிறகு, இந்த மாநாடானது அவற்றை எவ்வாறு கையாளுவது குறித்து விவாதிப்பதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

3 ஆண்டு கால கூட்டாண்மை திட்டத்தை மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

 • மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் செப்டம்பர் 04 2023 அன்று தேசிய தலைநகரமான புதுதில்லியில் கல்வி அமைச்சகம், தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாடுத்துறை மற்றும் மெட்டா ஆகியவற்றுடன் இணைந்து “தொழில்முனைவு: கல்வியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் தலைமுறையை மேம்படுத்துதல்” என்ற தலைப்பிடப்பட்ட 3 ஆண்டு கால கூட்டாண்மை ஒப்பந்தத்தை தொடங்கி வைத்துள்ளார்.
 • மெட்டா மற்றும் AICTE, NIESBUD மற்றும் CBSE ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில செய்திகள்

தண்ணீர் சேமிப்பு என்ற கருப்பொருளை கொண்ட ‘இந்தியா விர்ச்சுவல் மாரத்தான்’ சென்னையில் தொடக்கம்.

 • நாட்டில் நீர் ஆதாரங்களை சேமிப்பதையும் அதை சரியான வழியில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு பரப்புவதை முக்கிய நோக்கமாக கொண்டு இந்திய நீர் குழாய்கள் சங்கமானது(IPA), “நீராத்தான்” என்ற மெய்நிகர் மராத்தானை செப்டம்பர் 03 2023 அன்று தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் தொடங்கியுள்ளது.
 • அங்கு அவர்களுக்கு தண்ணீரைப் பாதுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மெய்நிகர் மாரத்தான் ஆனது சென்னையின் ஆல்காட் நினைவிடத்தில் தொடங்கி எம்ஆர்சி நகரில் நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கல்வி ஒத்துழைப்பு மேம்பாட்டிற்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் SAS இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 • பயிற்சி, கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழகமானது ஸ்ரீ அரவிந்தோ சொசைட்டி குழுமத்துடன் (SAS) செப்டம்பர் 03 2023 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
 • விவாதங்கள், பட்டறைகள், கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கலந்துரையாடல், குழுக்களின் தொடர்களை நடத்துதல் மற்றும் அதனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நியமனங்கள்

இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) புதிய தலைவராக ஆர் மாதவன் நியமனம்.

 • சமீபத்தில் “ராக்கெட்ரி” படத்தில் நடித்ததற்காக பரவலான பாராட்டுகளைப் பெற்ற பிரபல நடிகர் ஆர் மாதவன் அவர்கள், மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின்(FTII) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • இந்த நியமனம் குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ரெடிங்டன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக வி எஸ் ஹரிஹரன் நியமனம்.

 • தொழில்நுட்பத் தயாரிப்புகள் மற்றும் அவற்றின் சேவைகள் விநியோகாப்பாளரான உலகளாவிய முன்னணி ரெடிங்டன் குழுமமானது, அந்நிறுவன குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக வி எஸ் ஹரிஹரன் என்பவரை நியமிப்பதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 • சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் பொது மேலாண்மை ஆகியவற்றில் 25+ ஆண்டுகால அனுபவம் கொண்ட இவர் பல்வேறு சீரிய முயற்சிகளின் மூலம் நிறுவன மேன்மைக்காக பாடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

டாடா ஸ்டீல் சதுரங்க போட்டியில் 17 வயதான தேஷ்முக் “மகளிர் ரேபிட்” சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

 • இந்தியாவின் 17 வயதான சதுரங்க விளையாட்டு வீராங்கனையான  திவ்யா தேஷ்முக், செப்டம்பர் 02 அன்று, மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள இந்திய தேசிய நூலகத்தில் உள்ள பாஷா பவன் வளாகத்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் சதுரங்க தொடரின் பெண்களுக்கான பிரிவில்  ரேபிட் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.
 • இவர் தனது சீரிய ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த ஆட்டத்தில் தனது பட்டத்தை தக்க வைத்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் சிம்ரன்-ரித்திகா லாகோஸ் சர்வதேச சேலஞ்ச் பட்டத்தை வென்றுள்ளனர்.

 • செப்டம்பர் 02 2023 அன்று இரவு நைஜீரியாவில் நடைபெற்ற லாகோஸ் சர்வதேச கிளாசிக்ஸ் பேட்மிண்டன் தொடரில் மகாராஷ்டிராவை சேர்ந்த மகளிர் இரட்டையர் பிரிவில் ரித்திகா தாக்கர் மற்றும் சிம்ரன் சிங்கி ஆகியோர் அடங்கிய ஜோடியானது “வாக்ஓவர்” முறை படி வென்று தொடரின் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர்.
 • இந்த விளையாட்டு தொடரானது உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய தினம்

சர்வதேச தொண்டு தினம் 2023

 • 1979 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற மதிப்புமிகு அன்னை தெரசா அவர்களின் மறைந்த நினைவு நாளை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 05 ஆம் நாளானது சர்வதேச தொண்டு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
 • 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளவில் அனைத்து பொது நிறுவனங்களின் உதவி மூலம் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதையும் நிலையான வளர்ச்சி இலக்குகளையும் நிறைவேற்றுவதை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது. Global Solidarity to Eradicate Poverty என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

ஆசிரியர் தினம் 2023

 • இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் தேதியை போற்றி மதிக்கும் வகையில் இந்தியாவில் ஆசிரியர் தினமானது கொண்டாடப்படுகிறது. 
 • இந்த தினத்தினை கொண்டாடும் பாரம்பரியமானது 1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நம் நாட்டின் பிரகாசமான மனதை வழிநடத்தி கல்வி கற்பதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்புவதில் ஆசிரியர்கள் வகிக்கும் பங்கை போற்றுவதற்காக  இது கொண்டாடப்படுகிறது.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!