TCS, Wipro, Infosys & HCL Tech நிறுவனங்களில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு!

0
TCS, Wipro, Infosys & HCL Tech நிறுவனங்களில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் கவனத்திற்கு!
TCS, Wipro, Infosys & HCL Tech நிறுவனங்களில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் கவனத்திற்கு!
TCS, Wipro, Infosys & HCL Tech நிறுவனங்களில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு!

மென்பொருள் தொழில் எப்போதுமே நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் துறைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் கொரோனா தொற்று மென்பொருள் சேவைகளுக்கு வலுவான தேவையை உருவாக்கியுள்ளது. தற்போது ஐடி சேவை நிறுவனங்களால் கிட்டத்தட்ட 5,00,000 புதிய வேலைகள் உருவாகியுள்ளதாக சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

5 லட்ச வேலை வாய்ப்புகள்:

இந்தியாவில், ஐடி நிறுவனங்கள் அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஐடி துறை அதிக அளவில் பங்கு வருகிறது. கொரோனா வருகைக்கு பின் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான தேவையை அதிகரித்திருப்பதால், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் வேலைக்கான ஆர்டரை ஐடி நிறுவனங்கள் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை இந்த ஆண்டு இரட்டை இலக்க வருவாய் வளர்ச்சியை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐடி சேவை துறையில், இந்த நிதியாண்டில் மட்டுமே 500,000 க்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த வருடம் முதல் ஆறு மாதங்களில் பணியாளர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்கள் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா மற்றும் மைன்ட் ட்ரீ இணைந்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

நடப்பு நிதி ஆண்டில் ஐடி சேவை நிறுவனங்களில் 3,00,000 புதிய வேலைகளும், பிற பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து ஒரு 1,60,000 புதிய வேலைவாய்ப்புகளும், ஐடி சார்ந்த சேவை நிறுவனங்களில் இருந்து 50,000 மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பால் கல்லூரி படிப்பு முடித்து அனுபவமில்லாத பிரஷ்ஷர்களுக்கு வேலை கிடைக்கும். உலகளாவிய நிறுவனங்கள் டிஜிட்டல் துறையில் முதலீடு செய்வதால் இந்த ஆண்டு புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை இன்னும் உயரும் வாய்ப்பு உள்ளது. பெரிய மற்றும் நடுத்தர அளவிலான ஐடி சேவை நிறுவனங்கள் இரட்டை இலக்க வருவாய் வளர்ச்சிக்குத் திரும்புகின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!