தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு – அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் அரசு, ஊழியர்களுக்கென்று பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 9 மாதங்கள் வரை விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று சலுகை அளித்து இருந்தது. இதனை தற்போது 12 மாதங்கள் அதாவது 365 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஊழியர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் கொரோனா கால கட்டத்தில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு ஏதேனும் கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலோ அவர்களுக்கு 7 முதல் 14 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டது. அத்துடன் கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரியலாம் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து அரசு ஊழியரின் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அந்த அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து அரசு பெண் ஊழியர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அவர்களுக்கு 21 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று அரசு அனுமதித்துள்ளது. அத்துடன் பெண் அரசு ஊழியர்கள் அவர்களின் மகப்பேறு காலத்தில் 9 மாதங்கள் வரை விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

இதையடுத்து அரசு ஊழியர்கள் தங்களின் மகப்பேறு கால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்கள் வரை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட அரசு மகப்பேறு கால விடுப்பை 12 மாதங்களாக உயர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன்படி இப்போது பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பெண் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!