தமிழகத்தில் ரூ.3000 உதவித்தொகையுடன் ஓராண்டு கால வைணவ பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் ரூ.3000 உதவித்தொகையுடன் ஓராண்டு கால வைணவ பயிற்சி - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் ரூ.3000 உதவித்தொகையுடன் ஓராண்டு கால வைணவ பயிற்சி - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் ரூ.3000 உதவித்தொகையுடன் ஓராண்டு கால வைணவ பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைணவ பயிற்சி சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி காலத்தில் மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைணவ பயிற்சி:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அனைத்து திருக்கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் நலத்திட்டங்களாக முக்கிய திருக்கோயில்கள் மொட்டை அடிக்க கட்டணம் வசூலிப்பதை தடை செய்துள்ளது. அதற்கான கட்டணம் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வது எப்படி?

மேலும் ஒரு கால பூஜை நடைபெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் அா்ச்சகா்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் வைணவ பயிற்சி சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த ஓராண்டு பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. மேலும் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

கனமழை காரணமாக 1.59 லட்சம் மீனவர்களுக்கு ரூ.3000 நிவாரணம் – மாநில அரசு அறிவிப்பு!

இப்பயிற்சியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.srirangam.org மற்றும் www.hrce.tn.gov.in என்ற இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வைணவ பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி காலத்தில் மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் இவர்கள் வைணவ கோட்பாட்டிற்கு கட்டுப்பட்டு பயிற்சி காலம் முழுவதும் கோயில் வளாகத்திலேயே தங்க வேண்டும். அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு இலவசமாக உணவு, உடை வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!