தமிழக அரசு ஊழியர்களுக்கு 21 நாட்கள் தற்செயல் விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு 21 நாட்கள் தற்செயல் விடுமுறை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 21 நாட்கள் தற்செயல் விடுமுறை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 21 நாட்கள் தற்செயல் விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு என்று பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அறுவை சிகிச்சை செய்த அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அரசு ஊழியர்கள்

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் தனியார் துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணி அமர்த்தப்பட்டார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு நேரில் சென்று பணியில் ஈடுபட்டார்கள். இதனால் ஏராளமான அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஏராளமான ஊழியர்கள் உயிரிழந்தனர். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 21 நாட்கள் தற்செயல் விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இதையடுத்து அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் அவர்களுக்கு 7 முதல் 14 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியில் ஈடுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கொரோனா சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அரசு பல்வேறு சலுகைகளை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது.

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை!

மேலும் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் சிறப்பு விடுமுறையாக 12 மாதங்கள் வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் தெரிவித்தாவது, அரசு பெண் ஊழியர்கள் அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவர்களுக்கு 21 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெண் ஊழியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!