2024ம் ஆண்டுக்கான வருடாந்திர அட்டவணை வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

0
2024ம் ஆண்டுக்கான வருடாந்திர அட்டவணை வெளியீடு - முழு விவரங்கள் இதோ!

தொடங்கவுள்ள புதிய கல்வி ஆண்டுக்கான முழு வருடாந்திர நாட்காட்டி அட்டவணையை கல்வித் துறை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி நாட்கள், விடுமுறை நாட்கள் போன்ற முக்கிய தகவல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளது.

வருடாந்திர அட்டவணை:

டெல்லியில் பள்ளிகளுக்கான புதிய கல்வி அமர்வு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்குவது வழக்கம். இந்நிலையில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான வருடாந்திர நாட்காட்டி அட்டவணையை டெல்லி அரசு கல்வி இயக்குனரகம் தற்போது வெளியிட்டுள்ளது. அட்டவணையின் படி நர்சரி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான டெல்லி மாணவர்களுக்கான சேர்க்கையானது தற்போது நடைபெற்று வருவதாகவும், வரும் கல்வி ஆண்டில் மொத்தம் 220 வேலை நாட்கள் இருப்பதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

NLC இந்தியா Advisor வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய கல்வி அமர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும், மே 11ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மாணவர்களுக்கான கோடை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 28 முதல் 30-ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு இதில் வேலை நாட்களாக இருக்கும். அக்டோபர் 9 முதல் 11ஆம் தேதி வரை மாணவர்களுக்கான இலையுதிர் கால விடுமுறைகளும், ஜனவரி 1 முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!