சென்னை பல்கலை மாணவர் சேர்க்கை – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!

0
சென்னை பல்கலை மாணவர் சேர்க்கை - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!
சென்னை பல்கலை மாணவர் சேர்க்கை - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!
சென்னை பல்கலை மாணவர் சேர்க்கை – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்த நிலை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வந்தன. இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் சென்னை தொலைநிலை பல்கலைக்கழகத்தில் 2021 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வாயிலாக நடத்தப்படும் சான்றிதழ் படிப்பு, டிப்ளமா, இளநிலை, முதுநிலை பட்ட படிப்புகள், முதுநிலை கணினி பயன்பாடு, முதுநிலை பட்டயப்படிப்பு, முதுநிலை வணிக நிர்வாகவியல் படிப்புகள் போன்றவற்றிற்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் (பிப்ரவரி 25) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பு – அரசாணை வெளியீடு!!

இந்த படிப்புகளில் சேர்ந்து படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் சென்னை பல்கலை வளாகத்தில் உள்ள, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையத்தில் வார இறுதி நாட்களான (சனி மற்றும் ஞாயிறு) கிழமைகளில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வயது வரம்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

இதுகுறித்து கூடுதல் விவரங்கள் பெற http://www.ideunom.ac.in என்ற சென்னை தொலைநிலை பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளத்தை காணலாம். மேலும் இது தவிர சென்னைப் பல்கலைக் கழகத்தின் 117 கற்றல் மையங்கள் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெற்று சேரலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!