Jio-Hotstar டொமைன்-ஐ வாங்கிய 2 சிறுவர்கள்…!! ” எவ்வளவு ரூபாய்க்கு தெரியுமா”…??
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள், ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை Hotstar, Jio போன்ற செயலிகள் மூலம் மொபைல் போன்களில் கண்டுகளித்து வருகிறார்கள். மேலும், சமீபத்தில் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ ஆகிய இரு நிறுவனங்களும் கைகோர்ப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியை சேர்ந்த டெவலப்பர் ஒருவர் jiohotstar.com என்ற domain -யை வாங்கி, பல்வேறு நிபந்தனைகளை அந்நிறுவனத்திற்கு விடுத்து வந்ததாக செய்தி பரவியது. அதனை தொடர்ந்து, தற்போது துபாய் மாகாணத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த Jainam மற்றும் Jivika என்ற இரு சிறுவர்களும் தான் jiohoststar.com டொமைன்-ஐ ரூ.10 லட்சத்திற்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



























