தமிழகத்தின் 19 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? தலைமை செயலர் ஆலோசனை!

0
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? தலைமை செயலர் ஆலோசனை!
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? தலைமை செயலர் ஆலோசனை!
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? தலைமை செயலர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 19 மாவட்டங்களில் முழு ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து தலைமை செயலர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்து உள்ளது. மேலும் தினசரி பாதிப்பு எட்டாயிரத்தை கடந்து வருகிறது. இந்தியாவிலும் நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

பொது இடங்களில் சமூக இடைவெளியுடன் மக்கள் காணப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், அப்படி முகக்கவசம் அணியாமல் இருந்தால் 200 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் மாநில அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றாத போதில் ஊரடங்கு அமல்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

14 மணி நேரத்திற்கு RTGS சேவைகள் இயங்காது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்ற போதும், நோய்த்தொற்று கட்டுக்குள் வராத காரணத்தினால், 19 மாவட்டங்களில் மட்டும் பொது முடக்கம் அறிவிக்கலாம் என அரசு ஆலோசித்து வருகிறது. அதன்படி தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் கொரோனா அதிகம் பரவி வரும் 19 மாவட்டங்களில் ஊரடங்கை அமல்படுத்த ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தியாவில் பஞ்சாப், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேஷ் உள்ளிட்ட சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கும், சில மாநிலங்களில் பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here