TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – 11 லட்சம் பேர் பதிவு! தேர்வாணைய தலைவர் தகவல்!

0
TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - 11 லட்சம் பேர் பதிவு! தேர்வாணைய தலைவர் தகவல்!
TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - 11 லட்சம் பேர் பதிவு! தேர்வாணைய தலைவர் தகவல்!
TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – 11 லட்சம் பேர் பதிவு! தேர்வாணைய தலைவர் தகவல்!

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு TNPSC போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த வகையில் நடப்பு ஆண்டு குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 23( நேற்று) ஆகும். இந்நிலையில் இந்த தேர்வுக்கு மொத்தம் எத்தனை பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்பதற்கான விவரங்களை TNPSC தலைவர் வெளியிட்டு உள்ளார்.

குரூப்2, குரூப் 2A தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வார்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 2, குரூப் 2A (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பணிகளில் அடங்கிய 5529 பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த தேர்வுக்கு மார்ச் 23ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என TNPSC அறிவித்து. இந்த அறிவிப்பு அடிப்படையில் நேற்றுடன் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் முடிந்து விட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்கள் அடிப்படை விவரங்களை இணைய வழி நிரந்தப்பதிவு(OTR) மூலமாக கட்டாயப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

உக்ரைனின் கீவ் நகரில் நீண்ட ஊரடங்கு அமல் – மேயர் உத்தரவு! ரஷ்யா போர் எதிரொலி!

இந்த பதிவு 5 வருடங்களுக்கு செல்லத்தக்கது. அதன்பிறகு உரிய பதிவுக் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. நேர்முகத் தேர்வுக்கான பதவிகளை பொருத்தவரையில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய நிலைகளில் நடக்கும். அதன்படி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் 11, நன்னடத்தை அலுவலர் 2, தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் 19, பதிவுத்துறையில் சார்பதிவாளர் கிரேடு(2) 17, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்(மாற்றுத்திறனாளிகள்) 8, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் சிறப்பு உதவியாளர் 1, நுண்ணறிவுப் பிரிவில் தனிப்பிரிவு உதவியாளர் 15, குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு பிரிவில் தனிப் பிரிவு உதவியாளர் 43 என மொத்தம் 116 பணியிடங்களுக்கு மேற்கண்ட தேர்வு நடக்கிறது.

நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளை பொருத்தவரையில் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படும் பணிகள், நகராட்சி ஆணையர், தலைமைச் செயலகப் பணிகள், டிஎன்பிஎஸ்சி பணியிடங்கள், கூட்டுறவு சங்கத்துறைப்பணிகள், சட்டக் கல்லூரி விடுதிக் காப்பாளர் பதவிகள், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, வேளாண்மை மற்றம் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, தமிழ்நாடு அமைச்சுப்பணி, பேரூராட்சிகள் சார்நிலைப் பணி, தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலக பணிகளில் பல்வேறு துறைகளில் நேர்முக எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர், பணிகள் என மொத்தம் 5413 பணிகளுக்கு தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் 5529 காலிப்பணியிடங்களுக்கு தமிழகத்தில் 11 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக TNPSC தலைவர் தெரிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!