‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்பு!
விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் தேனீ வளர்ப்பு முறைகள், தேன் சேகரிப்பு நுட்பங்கள், மற்றும் சந்தைப்படுத்தல் திறன்கள் போன்றவைகள் கற்பிக்கப்படுகின்றன. வேளாண்மை மற்றும் வனத்துறை இணைந்து மேற்கொள்ளும் இந்த திட்டம், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு திறன்களை கல்வியில் ஒருங்கிணைக்கும் ‘எஸ்ஓஏஆர்’ திட்டம்
இலவசமாக வழங்கப்படும் இந்தப் பயிற்சி மூலம் கிராமப்புற இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் சிறு அளவில் தொழில் தொடங்கும் திறனை பெறுவார்கள். இதனால், தேனீ வளர்ப்பு தொழில் ஒரு புதிய வருமான மூலமாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பெரும் பங்களிப்பு செய்யும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆர்வமுள்ளவர்கள் தங்கள் மாவட்ட வேளாண்மை அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


























