உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வு பட்டதாரிகள் நவம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம்
உயர்கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியராக பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளுக்கான யுஜிசி நெட் (UGC NET) தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. தேசிய தேர்வாணையம் (NTA) நடத்தும் இத்தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களின் கல்வித் தகுதிகளை சரிபார்த்து, அதிகாரப்பூர்வ இணையதளமான [ugcnet.nta.ac.in](https://ugcnet.nta.ac.in) மூலம் நவம்பர் 7ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
இந்த தேர்வு மூலம் இந்திய அளவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதி நிரூபிக்கப்படும். இதனுடன், ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) வாய்ப்பும் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் நவம்பர் 8ஆம் தேதி வரை தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். தேர்வுக்கான அட்டவணை மற்றும் அனுமதி சீட்டு விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


























