கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தேசிய கடிதம் எழுதும் போட்டி 1,051 மாணவர்கள் உற்சாக பங்கேற்பு!
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், கோவை வட்டார இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய கடிதம் எழுதும் போட்டி நடைபெற்றது. ‘எனது வழிகாட்டிக்குக் கடிதம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் போன்ற பல துறைகளைச் சேர்ந்த மொத்தம் 1,051 மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியின் நோக்கம், டிஜிட்டல் உலகில் இளம் தலைமுறையினரிடம் கையெழுத்து தகவல் தொடர்பு கலையை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் உணர்வுகள் மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் திறனை ஊக்குவிப்பதாகும்.
நீலகிரி புத்தகத் திருவிழாவில் கோளரங்கம் நிகழ்ச்சி மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்!
நிகழ்ச்சியில் பல்கலை மாணவர் நல முதன்மையர் ராமலிங்கம், அஞ்சலக மக்கள் தொடர்பு அதிகாரி வெங்கட சுப்ரமணியன், லாலி ரோடு அஞ்சலக அதிகாரி பிரவீணா, பேராசிரியர் தங்கராஜ், என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல்காளை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவர்களின் பங்கேற்பு உற்சாகத்துக்கு கல்வி வட்டாரங்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளன.


























