இல்லம் தேடி கல்வி’ திட்ட தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி தொடக்கம்
தமிழ்நாடு அரசின் முக்கியமான கல்வித் திட்டமான ‘இல்லம் தேடி கல்வி திட்டம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. பள்ளிக்குச் செல்ல முடியாத அல்லது கல்வியில் பின்தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வீட்டிலேயே கல்வி உதவி வழங்கும் இந்த திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு தற்போது சிறப்பு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. கல்வித்துறை சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த பயிற்சி முகாம்களில், தன்னார்வலர்களுக்கு குழந்தைகள் மனப்பான்மை, கற்பித்தல் முறை, மற்றும் தொழில்நுட்ப கருவிகள் பயன்பாடு குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
8வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்!
இந்த பயிற்சியின் மூலம் தன்னார்வலர்கள், மாணவர்களை ஊக்குவிக்கும் திறனை வளர்த்துக்கொண்டு, அவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் பணியில் முக்கிய பங்காற்றவுள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, திட்டத்தின் மூலமாக பள்ளி விட்டு விலகிய மாணவர்கள் மீண்டும் கல்விக்குள் கொண்டு வரப்பட்டு, சமூகத்தில் கல்வி விழிப்புணர்வு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


























