ஆர்.டி.இ. சேர்க்கைக்கு தமிழகத்தில் 81,000 மாணவர்கள் விண்ணப்பம் – பெரும் வரவேற்பு!
தமிழகத்தில் ஆர்.டி.இ. (Right To Education) சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான பள்ளி சேர்க்கை விண்ணப்பங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்திய தகவலின்படி, மாநிலம் முழுவதும் 81,000க்கும் மேற்பட்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அரசு நிர்ணயித்த தளத்தில் பதிவு செய்யும் பணிகள் சில மாவட்டங்களில் இன்னும் நடைபெற்று வருவதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ சான்றிதழ் படிப்புகளில் சேர நவம்பர் 14 வரை அவகாசம்!
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு இலவச கல்வி வாய்ப்பு அளிக்கும் இந்தத் திட்டம் ஆண்டுதோறும் பெரும் வரவேற்பைப் பெறுகிறது. கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், விண்ணப்பங்களை சரிபார்த்த பின், லாட்டரி முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினர். இதனால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாணவர்கள் உயர்தர கல்வி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.


























