ஜீ தமிழ் “ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி 2” சீரியல் இறுதிநாள் படப்பிடிப்பு முடிந்தது – வைரலாகும் புகைப்படங்கள்!

0
ஜீ தமிழ்
ஜீ தமிழ் "ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி 2" சீரியல் இறுதிநாள் படப்பிடிப்பு முடிந்தது - வைரலாகும் புகைப்படங்கள்!
ஜீ தமிழ் “ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி 2” சீரியல் இறுதிநாள் படப்பிடிப்பு முடிந்தது – வைரலாகும் புகைப்படங்கள்!

ஜீ தமிழில் இரண்டு சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் “ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி 2” சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த சீரியலின் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு முடிவடைந்துள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இறுதிநாள் படப்பிடிப்பு:

தமிழ் சின்னத்திரையில் பல புதுமையான கதைகளை கொண்ட சீரியல்களை ஒளிபரப்பிய பிரபலமான சேனல் தான் ஜீ தமிழ். இதில் பல வெற்றி சீரியல்கள் ஆயிர கணக்கான எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி முடிவுக்கும் வந்துள்ளன. ஒரு சில சீரியல்களின் வெற்றியை தொடர்ந்து அந்த சீரியலின் இரண்டாவது சீசன் எடுக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி” சீரியல்.

Follow our Instagram for more Latest Updates

இந்த சீரியலில், நடிகை அஸ்வினி அறிமுகமானார். குண்டான தோற்றத்துடன் இருந்தாலும் அவருடைய நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் இந்த சீரியலின் முதல் பாகம் கொரோனா காலகட்டத்தில் முடிக்கப்பட்டது. அதன் பின் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. அந்த வகையில் தற்போது ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி 2 சீரியல் கிளைமேக்ஸ் காட்சிகளை நெருங்கி இருக்கிறது.

மீண்டும் ஹோட்டலை நடத்த தொடங்கிய கதிர் & முல்லை .. பாண்டியன் ஸ்டோர்ஸ் இனி வரும் திருப்பங்கள்!

Exams Daily Mobile App Download

மேலும் இறுதிநாள் படப்பிடிப்பு காட்சிகள் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் ஹீரோ ஹீரோயின் திருமண கோலத்தில் இருக்கின்றனர். மேலும் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் பலர் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!