ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை ஆன்லைன் மூலம் எவ்வாறு சேர்க்கலாம்? எளிய வழிமுறைகள் இதோ!

0
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை ஆன்லைன் மூலம் எவ்வாறு சேர்க்கலாம்? எளிய வழிமுறைகள் இதோ!
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை ஆன்லைன் மூலம் எவ்வாறு சேர்க்கலாம்? எளிய வழிமுறைகள் இதோ!
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை ஆன்லைன் மூலம் எவ்வாறு சேர்க்கலாம்? எளிய வழிமுறைகள் இதோ!

நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் அட்டை இருக்கிறது. இந்நிலையில் உங்களது குடும்பத்தில் புதிதாக ஒரு குழந்தை வந்தாலோ அல்லது திருமணம் முடிந்து புதிதாக பெண் வந்தாலோ அவரது பெயரை எப்படி ரேஷன் கார்டில் சேர்ப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் கார்டு:

அரசின் பல நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டுகள் மூலமாகவே மக்களுக்கு வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு என்பது வெறும் அடையாள அட்டையாக இல்லாமல் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் பான் அட்டை மற்றும் ஆதார் அட்டை போல ரேஷன் கார்டுகளும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் உங்களது குடும்பத்தில் புதிதாக உறுப்பினர் சேர்ந்தால் அவர்களது பெயரை ரேஷன் கார்டில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கவோ, திருத்தம் செய்யவோ நீங்கள் எங்கும் அலையாமல் ஆன்லைன் மூலமாக செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. உங்களது ரேஷன் கார்டில் உங்களுடைய குழந்தையின் பெயரை சேர்க்க, குழந்தையின் பிறப்பு சான்றிதழ், குழந்தையின் ஆதார் எண் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை கட்டாயம் ஆகும். மேலும் உங்களது குடும்பத்தில் புதிதாக ஒரு பெண் திருமணம் முடிந்து வந்தால் அவர்களது திருமண சான்று, அவரது ஆதார் அட்டை, பெற்றோரின் குடும்ப அட்டை, மற்றும் பெற்றோர்களின் குடும்ப அட்டையில் பெயர் நீக்கப்பட்டதற்கான சான்று போன்றவை தேவை.

கல்லூரி மாணவர்களுக்கான திட்டங்களில் மாற்றம் – UGC அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

மேலும் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் செய்யலாம். அந்த இணையதளத்தை ஓபன் செய்து அதில் உறுப்பினரை சேர்க்க என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் ரேஷனில் ஏற்கனவே பதிவு செய்த 10 இலக்க தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டும். பின் கேப்சா குறியீட்டினை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அதன் பின் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTPயை உள்ளீடு செய்தால் அது உங்களை இன்னொரு பக்கத்திற்கு கூட்டி செல்லும்.

அதில் உங்களுடைய ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் இருக்கும். அதன் கீழே குடும்ப உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் சேர்க்க வேண்டிய பெயரை கொடுக்க வேண்டும். பின் பாலினம், பிறந்ததேதி, உறவு முறை உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும். அதன் பின் ஆதார் எண்ணை கொடுத்து, உங்களது ஆதார் புகைப்படத்தை பதிவு செய்ய வேண்டும். பின் சேர்க்க என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் உங்களுடைய விவரங்களை சரி பார்த்துக் கொண்டு உறுதிப்படுத்துதல் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

பின் எல்லா படிகளும் முடித்த பின் உங்களது கோரிக்கை வெற்றிகரமாக முடிந்துவிட்டது என ஒரு குறிப்பு எண் வரும். இதனை ஸ்க்ரீன்சாட் அல்லது PDF ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த குறிப்பு எண்ணை வைத்து 15 நாளில் இருந்து 30 நாட்களுக்குள் www.tnpds.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்தால் உங்களுடைய ரேஷன் கார்டு விவரங்கள் தெரியும். அதில் உள்ள விவரங்கள் சரி என்றால், அதன் பின் அப்டேட் செய்யப்பட்ட ரேஷன் கார்டு உங்களுடைய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!