TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகளுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எப்போது அறிவிக்கும் என தேர்வர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

TNPSC Group 2 & 2A தேர்வு:

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள சுமார் 5529 பணியிடங்களுக்கு கடந்த மே 21 ஆம் தேதி நடத்தப்பட்ட குரூப் 2 மற்றும் 2A தேர்வில் சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 11 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியதாகவும், 1.83 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதவில்லை எனவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதிய சுமார் 11 லட்ச விண்ணப்பதாரர்கள், தங்களின் தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான முடிவுகள் இந்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என தேர்வாணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

Exams Daily Mobile App Download

அத்துடன், குரூப் 2-க்கான மெயின் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு டிசம்பர் 2022 முதல் ஜனவரி 2023 -க்குள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குரூப் 2 -க்கான எந்த தகவல்களையும் தேர்வாணையம் வெளியிடவில்லை. ஒவ்வொரு பதவிக்கும் 10 மடங்கு விண்ணப்பத்தாரர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். எனவே, TNPSC வெளியிட்ட உத்தேச விடைகள் மூலம் தேர்வர்கள் தங்களை மதிப்பீடு செய்து கொண்டு உடனடியாக முதன்மை தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறது.

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச விடுதி வசதி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

கட் ஆப் மதிப்பெண்கள்:

ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர், அனைத்து வகுப்பைகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினர் முதல்நிலைத் தேர்வில் 130 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்திருந்தால் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 140க்கு மேற்பட்ட சரியான கேள்விகள் எடுத்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் நல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனைய பிரிவினர் 147 முதல் 150 வரை சரியான கேள்விகளுக்கு பதிலளித்திருக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!