தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வரின் நிலைப்பாடு என்ன?
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று, நிதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியா்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை என்று கூறியிருந்தார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்:
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, திமுக அரசு அனைத்து துறைகளில் படிப்படியாக நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், திமுக கட்சி 309-ஆவது உறுதி மொழியாக பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தது. இந்த உறுதியின் பேரில் அரசு ஊழியர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர், இருப்பினும் ஆட்சிக்கு வந்து 1 வருடம் நிறைவடைந்த நிலையிலும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் முதல்வரின் அறிவிப்புக்கு மாறாகவும், தேர்தல் வாக்குறுதிக்கு எதிராகவும் சட்டப்பேரவையிலேயே நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தச் சாத்தியமே இல்லை என்று அறிவித்துள்ளார். இதனால் தமிழக அரசு மீது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் ஆசிரியர்கள் கூட்டமைப்பு, அமைச்சரின் பேச்சு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினரும், தொழிற்கல்வி ஆசிரியா் கழக மாநிலத் தலைவருமான செ.நா.ஜனாா்த்தனன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு? அமைச்சரவையில் முடிவு!
அந்த அறிக்கையில், கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு அதுவரை கிடைத்து வந்த பணிக்கொடை, ஓய்வூதியம் என்று எதுவும் முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டது. அதனால் இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து 19 ஆண்டுகளாக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் தமிழக முதல்வர் அரசு ஊழியர்கள் சங்க மாநாட்டில், அரசு ஊழியர்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் அரசு, பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை என தெரிவித்திருப்பது, அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும், எதிா்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. இதையடுத்து மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு வருடம்தோறும், வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளவை தான். அரசு ஊழியா்கள் மாநாட்டில், முதல்வா் ” உங்களோடு நான் இருக்கிறேன் ” என நம்பிக்கை அளித்தார். எனவே அகவிலைப்படி உயர்வு ,பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் முதல்வர் நேரடியாகத் தலையிட்டு நல்ல தீர்வை கொண்டு வர வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.