அலுவலக பணியாளர்களுக்கு குட் நியூஸ் – தொடரும் WFH முறை? புதிய விதிகளை உருவாக்க திட்டம்!

0
அலுவலக பணியாளர்களுக்கு குட் நியூஸ் - தொடரும் WFH முறை? புதிய விதிகளை உருவாக்க திட்டம்!
அலுவலக பணியாளர்களுக்கு குட் நியூஸ் - தொடரும் WFH முறை? புதிய விதிகளை உருவாக்க திட்டம்!
அலுவலக பணியாளர்களுக்கு குட் நியூஸ் – தொடரும் WFH முறை? புதிய விதிகளை உருவாக்க திட்டம்!

அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரவல் சூழலால் அனுமதிக்கப்பட்ட WFH முறையை புதிய விதிகளுடன் தொடர திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.

WFH செயல்முறை:

நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோய் பாதிப்புகள் நிமித்தம் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் உட்பட பல பணியிடங்களில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. இதில் குறிப்பாக அலுலகங்களை எடுத்துக்கொண்டால் கொரோனா காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கும் WFH முறையை அறிமுகம் செய்தது. இதன் காரணமாக ஊழியர்கள் நோய்த்தொற்றின் விளைவுகளைத் தவிர்க்கவும், தங்கள் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருக்கவும், நேரத்தை செலவிடவும் முடிந்தது.

IRCTC ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – டிக்கெட் ரத்து செய்வது குறித்த முக்கிய அறிவிப்பு!

இந்த முறை தான் கடந்த 2 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. இப்போது இந்த WFH முறை ஊழியர்களுக்கு நேரடி அழுத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அலுவலகங்களை மீண்டுமாக திறக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ஆரம்ப நாட்களில், ஊழியர்கள் அலுவலகங்களின் இந்த புதிய ஏற்பாட்டால் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். வீட்டில் இருந்து வேலை செய்யும் போது, அவர் தனது உறவினர்கள் மத்தியில் இருப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதனுடன், நிறுவனத்தின் லாபம் மற்றும் செயல்திறன் மேம்பட்டது.

அதனால் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கிய பிறகும், பல நிறுவனங்கள் இன்னும் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் நிறுவனங்கள், அலுவலக பராமரிப்பு, கால்டாக்சி, மின்சாரம் போன்ற செலவுகளை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, ஊழியர்களை அதிக மணிநேரம் வேலை செய்யவும் வைத்துள்ளது. இப்போது உலகில் 25 நாடுகளில் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களிடம் ஒரு நிறுவனம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இது குறித்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்தால் வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும். இப்போது வீட்டில் இருந்து வேலை செய்வதால், கூடுதல் பணி அழுத்தம் ஏற்படுவதாகவும், பணி நேரமும் நிர்ணயிக்கப்படாமல் இருப்பதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர். முன்பை விட இப்போது ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள். அவர்கள் மனதளவில் ஓய்வெடுக்க வீட்டில் இருந்து வேலை செய்யும் போது வாரத்தில் ஒரு நாளாவது விடுமுறை அளிக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் மத்திய அரசு, பணி தொடர்பான புதிய விதிகளை உருவாக்க யோசித்து வருகிறது. அதனால் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான விதிகளை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஊழியர்கள் கோருகின்றனர். ஏனெனில், புதிய முறையால் நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், ஊழியர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், படிப்படியாக நிறுவனத்தின் உற்பத்தித் திறனும் குறைந்து வருகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண்பது மிகவும் அவசியம். சிறு நிறுவனங்களில் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கும் அதிக வேலை அழுத்தம் உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ரூ.8,000 வரை சம்பள உயர்வு!

இவர்களால் குழந்தைகளை சரியாக கவனிக்க முடியவில்லை. வீட்டில் இருந்தே வேலை செய்வதால், அனைத்து ஊழியர்களின் மனநலப் பிரச்னைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், ஊழியர்களின் நேரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் வகையில் குழந்தை பராமரிப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களுக்கான விதிமுறைகளை உருவாக்கி, அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!