108 ஆம்புலன்சில் மாதம் ரூ.15,435 சம்பளத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!!

0
108 ஆம்புலன்சில் மாதம் ரூ.15,435 சம்பளத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!!
108 ஆம்புலன்சில் மாதம் ரூ.15,435 சம்பளத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!!
108 ஆம்புலன்சில் மாதம் ரூ.15,435 சம்பளத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!!

விழுப்புரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணிபுரிய டிரைவர், மருத்துவ உதவியாளர் பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் நாளுக்கு நாள் வெளியாகி கொண்டியிருக்கிறது. அந்த வகையில் விழுப்புர மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 108 அவசர ஆம்புலன்சில் பணிபுரிய மருத்துவ உதவியாளர்கள் மற்றும் டிரைவர்கள் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு நடைபெற இருக்கிறது.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை மறுநாள் (நவ.24) இப்பணிக்கான எழுத்துதேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கு வருகை புரிபவர்கள் தங்களின் கல்வி சான்றிதழ் மற்றும் சுயவிவரக்குறிப்பு ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். அத்துடன் இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு தகுதிகள்

வயது வரம்பு:

இதில் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதிகள்:

இப்பணிக்கு பி.எஸ்.சி நர்சிங், ஜி.என்.எம்,ஏ.என்.எம்,டி.எம்.எல்.டி அல்லது லைஃப் சயின்ஸ் பட்டதாரிகள் அல்லது இளங்கலை பட்டப்படிப்பில் தாவரவியல், விலங்கியல், மைக்ரோபயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பிளான்ட் பயாலஜி, பயோடெக்னாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பை படித்தவராக இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,435

மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் இணைப்பு – புதிய முறை அறிமுகம்! விவரம் இதோ!

Exams Daily Mobile App Download
டிரைவர் பணியிடத்திற்கான தகுதிகள்

வயது வரம்பு:

இப்பணியிடத்திற்கு 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதிகள்:

இப்பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

மேலும் இப்பணிக்கு ஓட்டுனர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் முடிந்து, பேட்ஜ் உரிமம் எடுத்து 2 ஆண்டுகள் முடிவடைந்து இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.15,235

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!