விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொள்ளும் நடிகை ஸ்ருதிகா – வைரலாகும் புகைப்படம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொள்ளும் நடிகை ஸ்ருதிகா - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொள்ளும் நடிகை ஸ்ருதிகா – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவியில் மக்களின் விருப்பமான ரியாலிட்டி நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் சென்ற வாரம் கிரேஸ் எலிமினேட் ஆனதால் மக்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் நடிகை ஸ்ருதிகா உடன் சேர்ந்து அவருடைய கணவரும் கலந்து கொள்ள இருக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

தமிழ் சின்னத்திரையில் நல்ல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் சீரியல்களையும் கொடுப்பதில் விஜய் டிவிக்கு தனி இடம் உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் மக்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கும் குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சென்ற வார எபிசோடில் 8 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் கடைசி நேரத்தில் கிரேஸ் அவர்கள் எலிமினேட் ஆனார்கள்.

மயூராவை பார்க்க ஸ்கூலிற்கு சென்ற கோபி, பாக்கியாவிற்கு வந்த சந்தேகம் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அதனால் ரசிகர்கள் சற்று வருத்தமாக இருக்கின்றனர். அதனை தொடர்ந்து இந்த வாரம் ஸ்ருதிகா, ரோஷினி, அம்மு அபிராமி, வித்யூலேகா, தர்சன், முத்துகுமார் ஆகியோர் போட்டியாளராக இருக்கின்றனர். அவர்களில் இந்த வாரம் நண்பர்களுடன் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதில் 7 போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஸ்ருதிகா தனது கணவர் அர்ஜுன் உடன் கலந்து கொள்ள இருக்கிறார். அது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

ஏற்கனவே அர்ஜுன் அம்மா என ஸ்ருதிகாவை கோமாளிகள் கிண்டல் செய்வார்கள். இந்த வார எபிசோடில் ஸ்ருதிகா தனது கணவருடன் கலந்து கொண்டு இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் இந்த வார எபிசோடு களைகட்டும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இந்த வாரத்தில் புகழ் இருப்பாரா என்பது தான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது. அது வெளியாகும் முதல் ப்ரோமோவில் உறுதியாக தெரிந்துவிடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!