மயூராவை பார்க்க ஸ்கூலிற்கு சென்ற கோபி, பாக்கியாவிற்கு வந்த சந்தேகம் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
மயூராவை பார்க்க ஸ்கூலிற்கு சென்ற கோபி, பாக்கியாவிற்கு வந்த சந்தேகம் - இன்றைய
மயூராவை பார்க்க ஸ்கூலிற்கு சென்ற கோபி, பாக்கியாவிற்கு வந்த சந்தேகம் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
மயூராவை பார்க்க ஸ்கூலிற்கு சென்ற கோபி, பாக்கியாவிற்கு வந்த சந்தேகம் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி எழிலிடம் பேசியதற்கு என்ன காரணம் என பாக்கியா கேட்க கோபி அதற்கு கோவமாக பேசிவிட்டு கிளம்புகிறார். பின் கோபி மயூராவை பார்க்க ஸ்கூலிற்கு வர அங்கே பாக்கியாவிடம் வேலை செய்பவர் கோபியை பார்த்துவிட்டு பாக்கியாவிடம் சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியிடம் பாக்கியா எழிலிடம் அப்படி பேசியதற்கு என்ன அர்த்தம் என கேட்கிறார். உனக்கு பிடித்தது போல வாழ்க்கை அமைய வேண்டும் என சொன்னேன் இதில் என்ன தவறு என கேட்க அப்போது பாக்கியா நீங்க அப்படி கேட்கவில்லை. என்னை போல உனக்கு வாழ்க்கை அமைந்துவிட கூடாது என சொன்னீங்க என கேட்கிறார். அப்போது பாக்கியா என்னை பிடிக்காமல் தான் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டீர்கள் ஆனால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் என கேட்கிறார்.

அனைவரும் தடுத்தும் வீட்டை விட்டு வெளியேறிய கதிர் முல்லை, சாபம் விட்ட முல்லை அம்மா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அப்போது கோபி உன்னை திருமணம் செய்து 25 வருடம் என் வாழ்க்கையில் நான் இழந்த சந்தோசம் எதுவும் திரும்ப கிடைக்கப் போவதில்லை என சொல்ல, அதற்கு நான் என்ன செய்ய முடியும் என கேட்க உன்னால் எதுவும் செய்ய முடியாது என சொல்லி கோபி சத்தமாக பேசிவிட்டு சென்று விடுகிறார். அப்போது பாக்கியாவிற்கு என்ன சொல்வது என தெரியாமல் வருத்தப்பட்டு அழுகிறார். மறுநாள் மயூராவை பார்க்க கோபி ஸ்கூலிற்கு செல்கிறார்.

அங்கே பாக்கியாவிடம் வேலை செய்பவர் கோபியை பார்த்துவிடுகிறார். மயூரா ஸ்கூல் விட்டு வர கோபி மயூராவிடம் பாசத்துடன் பேசுகிறார். அப்போது மயூரா பிரச்சனை எல்லாம் சரியாகிவிடுமா என கேட்க அப்போது கோபி இல்லை என சொல்கிறார். உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. அதனால் தான் நான் உன்னை பார்க்க வந்ததாக சொல்ல பாக்கியாவிடம் வேலை செய்பவர் அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது மயூரா நான் கிளம்புகிறேன் என சொல்லி ஆட்டோவில் ஏற செல்ல அப்போது கோபி மயூராவை ஆட்டோ வரை ஏற்றி விடுகிறார்.

பாக்கியா அலுவலகத்தில் இருக்க, வேலை செய்பவர் வருகிறார். அப்போது பாக்கியா ஸ்கூலில் என்ன சொன்னார்கள் என கேட்கிறார். அவன் வகுப்பில் சரியாக மார்க் வாங்கவில்லை என்பதால் வர சொன்னதாக சொல்கிறார். பின் பாக்கியாவிடம் சார் ஸ்கூலில் ஒரு சின்ன பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததாக சொல்ல இனியாவை பார்க்க வந்திருப்பார் என சொல்கிறார். ஆனால் அந்த பெண்ணுடன் பேசிவிட்டு அவளை ஸ்கூலில் இருந்து ஆட்டோ ஏற்றி விட்டார் என சொல்கிறார்.

மறுபக்கம் இனியாவின் நண்பர்கள் எழில் படம் நன்றாக இருப்பதாக சொல்கிறார். அப்போது எழில் வர பாக்கியா அவருக்கு சுத்தி போடுகிறார். அப்போது எல்லாரும் படம் நன்றாக இருப்பதாக சொல்ல பாக்கியா சந்தோசப்படுகிறார். இனிமேல் நிறைய பணம் வருமா என கேட்க ஆமாம் என எழில் சொல்கிறார். பணம் வந்ததும் என்ன செய்வாய் இந்த வீட்டை பெரிதாக கட்டுவாய் என இனியா சொல்ல இந்த வீட்டை இல்லை வேற பெரிய வீடு கட்டி என் அம்மாவை அதில் மகாராணி போல வைப்பேன் என சொல்கிறார்

Exams Daily Mobile App Download

அதை கேட்டு ஈஸ்வரி கோபப்படுகிறார். பாக்கியா இல்லாமல் நாங்க இருக்க மாட்டோம் என சொல்கிறார். பின் தாத்தாவிடம் எழில் படம் பற்றி சொன்னால் அவர் சந்தோஷப்படுவார் என சொல்கிறார். பின் பாக்கியா இனியாவிடம் உன் அப்பா ஸ்கூலிற்கு வந்தாரா என கேட்க இல்லை என இனியா சொல்கிறார். எதாவது பீஸ் கட்ட வேண்டியதாக இருக்குமோ என கேட்க அதெல்லாம் எதுவும் இல்லை என இனியா சொல்லிவிட்டு கிளம்புகிறார். அதனால் பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here