குழந்தை வரம் கேட்டு பரிகாரம் செய்யும் முல்லை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!

0
குழந்தை வரம் கேட்டு பரிகாரம் செய்யும் முல்லை -
குழந்தை வரம் கேட்டு பரிகாரம் செய்யும் முல்லை - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!
குழந்தை வரம் கேட்டு பரிகாரம் செய்யும் முல்லை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு குழந்தை இல்லாததால் அதிக பணம் செலவு செய்து டிரீட்மென்ட் பார்க்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் அடுத்த வார எபிசோடுகளில் கஸ்தூரி ஒரு கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தால் நிச்சயம் குழந்தை பிறக்கும் என சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதிர் ஜோடி குழந்தை வேண்டும் என ஆசையுடன் இருக்க முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மை கதிருக்கு தெரிய வருகிறது. முல்லைக்கு இந்த உண்மை தெரிந்தால் வருத்தப்படுவார் என்பதால் கதிர் அந்த உண்மையை மறுத்துவிடுகிறார். ஆனாலும் முல்லைக்கு சந்தேகம் வர அவர் மீனாவுடன் மருத்துவமனை சென்று பார்க்க அவருக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மை தெரியவருகிறது. அதனால் உடைந்து போன குடும்பம் செயற்கை கருத்தரிப்பு செய்ய முடிவு செய்கிறது.

அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – ரசிகர்கள் வாழ்த்து!

ஆனால் அதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகும் என்பதால் இப்போதைக்கு புது வீடு கட்டும் திட்டத்தை தள்ளி போடுகின்றனர். அதனால் மீனாவிற்கு வருத்தமாக இருக்க அவர் பேசுவதை முல்லை கேட்டுவிடுகிறார். மேலும் பணம் செலவாகும் என்பதால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் வருகிறது. அதனால் முல்லை அரசு மருத்துவமனையில் செய்யலாம் என சொல்ல ஆனால் அதற்கும் வழி இல்லாமல் இருக்கிறது. அதனால் என்ன செய்வது என தெரியாமல் முல்லை இருக்கிறார்.

“பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பாதுகாப்பே இல்லை” – நடிகர் தாடி பாலாஜி ஓபன் டாக்!

இந்நிலையில் முல்லையின் நிலைமையை புரிந்து கொண்டு கஸ்தூரி கோவில் ஒன்றை சொல்கிறார். அந்த கோவிலுக்கு சென்றால் கட்டாயம் குழந்தை பிறக்கும் என சொல்ல, முல்லை உண்மையாகவா என கேட்கிறார். ஆமாம் என கஸ்தூரி சொல்ல, முல்லை கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய முடிவு செய்கிறார். அவர் கஷ்டப்படுவதை பார்த்து கதிர் வருத்தப்படுகிறார். மேலும் இந்த பரிகாரத்தின் முடிவில் முல்லை இயற்கையாகவே கர்ப்பமாக போகிறாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here