
வீட்டில் விவரத்தை சொல்ல முடியாமல் தவிக்கும் இனியா, எழிலிடம் திருமணம் பற்றி பேசும் அமிர்தா குடும்பம் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா ஸ்கூலில் நடந்தது பற்றி வீட்டில் சொல்ல முடியாமல் கஷ்டப்படுகிறார். மறுபக்கம் எழில் அமிர்தா வீட்டிற்கு செல்ல அங்கே அவர்களுக்கு நம்பிக்கை குறைந்ததை பார்த்து வருத்தப்படுகிறார்.
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் இனியாவிடம் பாக்கியா ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என கேட்க, மிஸ் திட்டினார்கள், உங்களை நாளைக்கு அழைத்து வர சொன்னதாக இனியா சொல்கிறார். உடனே பாக்கியா நீ என்ன செய்தாய் என கேட்க, இனியா நான் ஒன்றும் செய்யவில்லை என சொல்கிறார். பின் பாக்கியா எதற்கு எங்களை வர சொன்னார்கள் என கேட்க, இனியா அதெல்லாம் ஒன்றுமில்லை நான் சும்மா சொன்னேன் என சொல்ல, நீ தான் மாற்றி மாற்றி பேசுவதாக ஜெனி சொல்கிறார். பின் இனியா ஏன் என்னிடம் இப்படி கேள்வி கேட்குறீங்க என கேட்டு கிளம்புகிறார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
பின் இவள் ஏன் இப்படி இருக்கிறாள் என தெரியவில்லை என சொல்ல, ஜெனி நண்பர்களுடன் சண்டை போட்டு இருப்பாள் என சொல்கிறார். பின் எழில் அமிர்தா வீட்டிற்கு வர அமிர்தா சரியாக பேசாமல் இருக்கிறார். அப்போது எழில் என்ன ஆச்சு என கேட்க அமிர்தா எதுவும் பேசாமல் இருக்கிறார். பின் அமிர்தாவின் அம்மா அப்பா வர அவர்களும் எழிலிடம் சரியாக பேசாமல் இருக்கிறார்கள். அப்போது அமிர்தாவின் அம்மா உங்க வீட்டில் பேசிவிட்டாயா என கேட்க, அம்மாவிடம் சொல்லிவிட்டேன் இப்போது குடும்பம் இருக்கும் நிலைமையில் கொஞ்ச நாள் போகட்டும் என சொல்கிறார்.
உடனே அமிர்தாவின் அம்மா அதெல்லாம் சரி அந்த பொண்ணு என சொல்ல ஆரம்பிக்க ஆனால் அமிர்தாவின் அப்பா செல்லவிடாமல் இருக்கிறார். பின் உனக்கு எதாவது பொண்ணு பாக்கிறார்களா என கேட்க, இல்லை என எழில் சொல்கிறார். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் நான் பேசுகிறேன் என எழில் சொல்ல, அதுவரை இங்கே வராதே என அமிர்தாவின் அப்பா சொல்கிறார். அதை கேட்டு எழில் வருத்தப்படுகிறார். மறுபக்கம் செழியன் ஜெனிக்கு பழம் எடுத்து கொடுக்க, அப்போது செழியன் இந்த பழம் அப்பா வாங்கி கொடுத்தது என சொல்கிறார். அதை கேட்டு ஜெனி கோவமாக பேசுகிறார்.
ஜெனி சத்தம் போடுவதை பார்த்து செழியன் இப்படி பண்ணாதே என சொல்ல, உடனே ஈஸ்வரி வந்து என்ன ஆச்சு என கேட்கிறார். ஜெனி இந்த பழம் கோபி அங்கிள் வாங்கி கொடுத்ததாம் என சொல்ல, ஈஸ்வரி கோவப்பட்டு செழியனை திட்டிவிட்டு பழங்களை கீழே கொட்டுகிறார். பின் பாக்கியா அவர் செய்த துரோகம் மட்டும் உனக்கு நியாபகம் இருந்தால் போதும் என சொல்கிறார். பின் இனியா எழிலிடம் என் ஸ்கூலிற்கு நாளைக்கு வா என சொல்கிறார். ஆனால் எழில் நான் வரமாட்டேன் என சொல்கிறார். பின் இனியா தாத்தாவிடம் சென்று ஸ்கூலிற்கு வர சொல்கிறார். அப்போது தாத்தா சரி நான் வருகிறேன் என சொல்கிறார். பின் இனியா ஸ்கூலிற்கு போன் எடுத்து சென்றால் தப்பா என கேட்க, பாக்கியா ஆமாம் தப்பு என சொல்கிறார். இனியா அதை கேட்டு சும்மா கேட்டேன் என சொல்ல, பாக்கியா இவள் சரி இல்லையே என நினைக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.