தமிழகத்தில் இன்று (நவம்பர் 12) 28 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் கவனத்திற்கு!

0
தமிழகத்தில் இன்று (நவம்பர் 12) 28 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - மாணவர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் இன்று (நவம்பர் 12) 28 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - மாணவர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் இன்று (நவம்பர் 12) 28 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் கவனத்திற்கு!

வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்ததை தொடர்ந்து, நேற்று முதல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இன்றும் ( நவ 12) 26 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பல மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக வழுபெற்று இருக்கிறது. அதனால் நேற்று முதல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும் நேற்று நள்ளிரவு பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

கனமழை எதிரொலியாக நேற்று 28 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றும் தமிழகத்திற்கு “ரெட் அலர்ட்” விடப்பட்டுள்ளதால் 28 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் நாளை வரை பல மாவட்டங்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.

ஹேமா & லக்ஷ்மியின் பாசத்தில் நெகிழும் கண்ணம்மா – இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு!

பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்:

  • சென்னை
  • திருவள்ளூர்
  • காஞ்சிபுரம்
  • கடலூர்
  • சேலம்
  • திருச்சி
  • கரூர்
  • செங்கல்பட்டு
  • மயிலாடுதுறை
  • திருவாரூர்
  • திருவண்ணாமலை
  • அரியலூர்
  • ராணிப்பேட்டை
  • திண்டுக்கல்
  • விழுப்புரம்
  • வேலூர்
  • நீலகிரி
  • தேனி
  • கோவை
  • பெரம்பலூர்
  • கள்ளக்குறிச்சி
  • தஞ்சாவூர்
  • திருப்பத்தூர்
  • ராமநாதபுரம் (பள்ளிகளுக்கு மட்டும்)
  • புதுக்கோட்டை
  • சிவகங்கை
  • மதுரை
  • தருமபுரி

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!