விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்.. மாப்பிள்ளை இவரா? – திருமண நாள் குறித்த அப்டேட்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்.. மாப்பிள்ளை இவரா? - திருமண நாள் குறித்த அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்.. மாப்பிள்ளை இவரா? – திருமண நாள் குறித்த அப்டேட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரித்திகாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், அவருடைய திருமண தேதி மற்றும் மாப்பிள்ளை யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் டாப் வரிசையில் இருக்கும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் பாக்கியாவின் இரண்டாவது மகன் எழிலின் காதலியாக அமிர்தா கதாபாத்திரத்தில் நடிகை ரித்திகா நடித்து வருகிறார். அவருடைய எதார்த்தமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது

Follow our Instagram for more Latest Updates

ஆனால் அவர் யாரை திருமணம் செய்ய போகிறார் அவருடைய திருமண தேதி குறித்த விவரங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது அவருடைய திருமண பத்திரிகை வெளியாகி இருக்கிறது. அதில் அவர் வினு என்பவரை திருமணம் செய்ய இருப்பதாகவும், அவர்களின் திருமணம் வருகிற நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய கணவர் விஜய் டிவியில் நிர்வாக குழுவில் முக்கிய பதவியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வீட்டில் விவரத்தை சொல்ல முடியாமல் தவிக்கும் இனியா, எழிலிடம் திருமணம் பற்றி பேசும் அமிர்தா குடும்பம் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அதனால் கண்டிப்பாக அவருக்கு காதல் திருமணமாக இருக்கும் என்பது உறுதியாக தெரிகிறது. மேலும் அவர் திருமணத்திற்கு பின் தொடர்ந்து சீரியலில் நடிப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அது குறித்து அவரே விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் நடிகை ரித்திகாவின் திருமணத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!