
மாமியாரை கீழே தள்ளி சண்டை போட்ட ராதிகா.. கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ஈஸ்வரி – “பாக்கியலட்சுமி” சீரியல் இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், மயூராவை கோபி தான் ஸ்கூலில் விட வேண்டும் என ராதிகா சண்டையிட அதனால் பெரிய பிரச்சனை வருகிறது. அதனால் கோவப்பட்ட ஈஸ்வரி இனிமேல் ராதிகா வீட்டில் இருக்க கூடாது என வெளியே தள்ளுகிறார்
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், கோபி இனியா மீது அக்கறை காட்டும் அளவிற்கு மயூரா மீது அக்கறையாக இல்லை என ராதிகா நினைக்கிறார். அதனால் மயூராவை கோபி தான் ஸ்கூலில் விட வேண்டும் என சண்டை போடுகிறார். அதை கேட்ட ஈஸ்வரிக்கு பயங்கரமாக கோவம் வருகிறது. உடனே ஈஸ்வரி அவனுக்கு முக்கியமான மீட்டிங் இருக்கிறது. உன் பொண்ணை நீ தான் கூட்டிட்டு போக வேண்டும் என சொல்கிறார். உடனே ராதிகா இனியாவை கூட்டிக் கொண்டு செல்ல நிறைய பேர் இருக்காங்க ஆனால் எனக்கு யாரும் இல்லை என ராதிகா சொல்ல, உன் அம்மாவை கூட்டிக் கொண்டு செல்ல சொல்கிறார்.
சுகாதார பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு – அமைச்சர் அறிவிப்பு!
உடனே கோவப்பட்ட ராதிகா கோபியை ரூமிற்கு அழைத்து சண்டையிட, உடனே கோபி உன்னால தான் என் அம்மா இப்படி எல்லாம் என் அம்மா இப்படி மாறிட்டாங்க எங்க வீட்டில் நிம்மதி இல்லை என சொல்கிறார். உடனே ராதிகா இனியா மீது பாசம் காட்டுவது போல மயூரா மீது காட்டுங்க என சொல்லம் வேறு வழி இல்லாமல் கோபி மயூராவை அழைத்து கொண்டு வருகிறார்.
Join Our WhatsApp
Group” for Latest Updates
அதை பார்த்து ஈஸ்வரி திட்ட, கோபி ஆபிஸ் கிளம்புகிறார். அப்போது ராதிகா காபி போட கீழே வர அந்த காபியை ராதிகா தட்டிவிடுகிறார். உடனே ராதிகா ஈஸ்வரியை பிடித்து தள்ளிவிட அவர் அழுது புலம்பி பிரச்சனை செய்கிறார். இனிமேல் இந்த வீட்டில் நீ இருக்க கூடாது என ஈஸ்வரி சொல்லி ராதிகாவை வெளியே தள்ளிவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.