மூர்த்தி குடும்பத்தை சந்திக்கும் பாக்கியா குடும்பம், எழிலை பார்த்து ஓடிய கோபி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

0
மூர்த்தி குடும்பத்தை சந்திக்கும் பாக்கியா குடும்பம், எழிலை பார்த்து ஓடிய கோபி - இன்றைய
மூர்த்தி குடும்பத்தை சந்திக்கும் பாக்கியா குடும்பம், எழிலை பார்த்து ஓடிய கோபி - இன்றைய "மகா சங்கமம்" எபிசோட்!
மூர்த்தி குடும்பத்தை சந்திக்கும் பாக்கியா குடும்பம், எழிலை பார்த்து ஓடிய கோபி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” மற்றும் ” பாண்டியன் ஸ்டோர்ஸ்” மகா சங்கமம் சீரியலில், மூர்த்தி குடும்பத்தை, பாக்கியா குடும்பம் பார்த்துவிடுகின்றனர். பின் அனைவரும் சேர்ந்து காலை சாப்பாடு சாப்பிடுகின்றனர். மறுபக்கம் கோபியை எழில் சந்திக்க கோபி என் நிம்மதியை கெடுக்க வந்துவிடுவதாக சொல்கிறார். உடனே எழில் உங்களுக்கு அசிங்கமாக இல்லையா என கேட்க, ஆனால் கோபி அங்கிருந்து கிளம்புகிறார்.

மகா சங்கமம்:

இன்று “மகா சங்கமம்” சீரியலில், கோபி ரூமில் கிளம்பி இருக்க, அப்போது அவருடைய நண்பர் போன் செய்து எங்கே இருக்கிறாய் என கேட்கிறார். கோபி போனை அட்டென்ட் செய்ய அவர் எங்கே இருக்கிறாய் என கேட்கிறார். உடனே கோபி நான் சாப்பிட போகிறேன் என சொல்ல, மோகன் நானும் சாப்பிட வருகிறேன் என சொல்கிறார். ஆனால் கோபி ராதிகாவை பார்த்துவிடுவார் என்பதால் சாப்பிட இன்னும் நேரம் கழித்து தான் வருவேன் என சொல்லி சமாளிக்கிறார். அப்போது ராதிகா கிளம்பி வர போவோமா என கேட்கிறார். ஆனால் கோபி மாட்டிக் கொள்வோம் என பயந்து, நாம ரூமில் இருக்கலாம் என சொல்கிறார். அதற்கு ராதிகா அப்போ சென்னையில் இருந்திருக்கலாம் என சொல்ல, உடனே கோபி அங்கே உன் அம்மா, அண்ணன் மயூரா என அனைவரும் இருந்தார்கள் ஆனால் இப்போது நாம இருவர் மட்டும் தான் என சொல்கிறார்.

பின் ராதிகா ஹோட்டலிற்கு சாப்பிட போவோம் என சொல்ல, ஆனால் கோபி ரூமிற்கு வர வைத்து சாப்பிடலாம் என சொல்கிறார். ஆனால் ராதிகா கேட்காமல் இருக்க உடனே கோபி குளித்துவிட்டு வருகிறேன் என கிளம்புகிறார். மறுபக்கம் மூர்த்தி குளித்துவிட்டு வர பயங்கரமாக குளிர்கிறது என சொல்கிறார். அப்போது தனம் கண்ணனும் ஐஸ்வர்யாவும் வெளியே சுற்றி பார்க்க போகட்டும், நாம ரூமில் இருப்போம் என சொல்ல, அந்த நேரம் கண்ணனும் ஐஸ்வர்யாவும் வந்து நீங்களும் உடன் வர வேண்டும் என சொல்கிறார்கள். பின் அனைவரும் சாப்பிட வருகின்றனர். மறுபக்கம் பாக்கியா குடும்பத்துடன் அதே ஹோட்டலிற்கு சாப்பிட வருகிறார்கள்.

அப்போது இனியா போட்டோ எடுக்க, ராமமூர்த்தி இயற்கையை ரசிக்க வேண்டும் என சொல்கிறார். மறுபக்கம் மூர்த்தி சாப்பிட அமர, சாப்பாடு விலை அதிகமாக இருக்கிறது. உடனே வெளியே சாப்பிடலாம் என சொல்ல, தனம் இதெல்லாம் இலவசம் தான் என சொல்லி சமாளிக்கிறார். அப்போது மூர்த்தி சத்தம் கேட்டு எழில் வந்து பார்க்க, குடும்பத்தினர் அனைவரும் மூர்த்தி குடும்பத்தை பார்த்து சந்தோசப்படுகின்றனர். பின் எல்லாரும் சேர்ந்து சாப்பிட, அந்த நேரம் கோபி ராதிகாவுடன் வருகிறார். அப்போது கோபிக்கு போன் வர அவர் அதை பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் எழில் போன் பேச வெளியே வர கோபியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

WhatsApp ல் அறிமுகம் ஆக இருக்கும் புதிய அப்டேட் – உங்களுக்கும் இருக்கா? தெரிஞ்சுக்கோங்க?

கல்யாணத்தில் எல்லாரும் வந்து நிம்மதியை கெடுத்தது போல நீயும் கெடுக்க வந்துவிட்டாயா என கோபி கேட்க, எழில் உங்களுக்கு இதெல்லாம் வெட்கமாக இல்லையா என எழில் கேட்கிறார். ஆனால் கோபி எதுவும் பேசாமல் கிளம்பி செல்கிறார். பின் ராதிகா உடன் அவர் சேர்ந்து செல்வதை பார்த்து எழில் அதிர்ச்சி அடைகிறார். பின் கோபி ஹோட்டலில் சாப்பிட அமர, எழில் குடும்பத்தினர் அவரை பார்க்க கூடாது என நினைக்கிறார். அப்போது கோபியை வெளியே சென்று சாப்பிட சொல்கின்றனர். வெளியே சென்ற கோபி எழில் மட்டும் வந்திருக்கான இல்லை யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என தெரியாமல் குழப்பத்தில் இருக்க, ராதிகா என்ன ஆச்சு என கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!